Tejashwi Yadav: ‘‘பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை…!

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், “பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசுகின்றனர். இது பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை.” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

Tejashwi Yadav: 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவில் சூப்பர் ஃப்ளாப்..!

பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பிஹாரில் ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 48.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, “எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தினோம். நல்ல கருத்துக்கள் வந்துள்ளன.

400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே சூப்பர் ஃப்ளாப் ஆகியுள்ளது. பிஹார் மக்கள் இந்த முறை அதிர்ச்சி தரும் முடிவுகளைத் தருவார்கள். பிஹார் மக்களுக்கு பாஜக எதுவும் செய்யவில்லை. 2014, 2019-ல் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இப்போது பாஜகவின் பொய் வாக்குறுதிகளால் பொதுமக்கள் சோர்வடைந்துள்ளனர். பிஹாரில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த முறை பாஜகவினர் மிகவும் கவலையடைந்துள்ளனர். அரசியல் சட்டத்தை ஒழிப்போம் என்கிறார்கள். அரசியலமைப்பை அழிப்பவர்கள் தாங்களாகவே அழிக்கப்படுவார்கள்” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

மும்பையில் நடந்த இண்டியா கூட்டணி தீர்மானம்…! ஒரே அணியாக போட்டி…!

2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. பாட்னா, பெங்களூருவில் இதன் முதல் 2 கூட்டங்கள் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த 3-வது ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பிஹார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற சூழலிலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், பாஜகவை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், மக்களவை தேர்தலில், முடிந்தவரை தொகுதி பங்கீட்டுக்கான இடங்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பெற்று, ஒரே அணியாக போட்டியிடுவோம் என கூட்டணி தலைவர்கள் தீர்மானமாக அறிவித்து குறிப்பிடத்தக்கது.