தமிழகத்தில் 2003-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுக்கு லாட்டரி சீட்டு விற்பனை மூலம் கிட்டத்தட்ட 1500 க்கு மேல் ஆண்டு வருமானம் கிடைத்தது. இந்த லாட்டரி சீட்டு விற்பனையால் கூலி தொழிலாளிகள் தன்னுடைய உழைப்பை முழுமையாக இழந்து நடுத்தெருவில் நின்றது மட்டுமின்றி பல குடும்பங்கள் தற்கொலை வரை சென்றதால் கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய அதிமுக அரசு தடை செய்தது.
தொடக்க காலத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை காவல்துறை கைது செய்த்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர் காவல்துறையின் கண்காணிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதன் காரணமாக லாட்டரி சீட்டு விற்பனை திரைமறைவில் சுகந்திரமாக நடைபெற தொடங்கியது. இதுமட்டுமின்றி கேரளாவில் இருந்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக அதிகளவில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றான வால்பாறையில சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செய்கின்றனர். இங்குமுகாமிட்டுள்ள சமூக விரோதிகள் பலர் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் குற்ற செயல்களை செய்து வருகின்றனர்.
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, கள்ள மது, விபச்சாரம், லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அங்கு சுற்றுலா செய்வோர் கவலை படுகின்றனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் 2003 -ஆம் ஆண்டே தடை செய்யபட்டாலும், அந்த தொழிலை ஏற்கனவே செய்தவர்கள் சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இன்றும் மறைமுகமாக செய்து வருகின்றனர். இதன் விளைவாக காவல்துறையினரும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் லாட்டரி சீட்டுகள் உயிர்ப்புடன் கூலி தொழிலாளிகளை இன்றும் சுரண்டப்படுகிறார்கள் என்பதே வேதனையான சம்பவம். எனவே காவல்துறை இனிமேலாவது விழித்து எழுந்து பல இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் விபச்சார தொழிலை தடுத்து வால்பாறையை மீட்டு எடுக்குமா? காவல்துறை என்று எதிர்பார்க்கும் சமூக ஆர்வலர்கள்.