ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகாவில் உள்ள மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,105 மீட்டர் உயரத்தில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைத்துள்ளது. அங்கு விவசாயம் முக்கிய தொழிலான மஞ்சள், மக்காச்சோளம், ராகி, முட்டைகோஸ், கரும்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதாவது விவசாயத்தை தவிர வேறு எந்த ஒரு தொழிலும் இல்லை.
இந்த பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் மழைநீரை மட்டும் நம்பி விவசாயம் நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆழ்குழாய் கிணறு மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். கோடை காலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காத நிலை தாளவாடி மலைக்கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லாததால் மலைக்கிராம மக்கள் வறட்சி காலத்தில் பெரும் துயரத்தை சந்திக்கின்றனர்.
ஆண்டுதோறும் தாளவாடியில் 600 மி.மீட்டர் முதல் 800 மி.மீட்டர் வரை மழை பொழிந்தும் தண்ணீர் சேமித்து வைக்க இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் மற்றும் ஆண்டு கொண்டு இருப்பவர்கள் எவ்வித முன்னேரிக்கை நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தண்ணீர் முழுவதும் ஓடையின் வழியாக வீணாக சென்று சுமார் 8 டி.எம்.சி. முதல் 12 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக மாநிலத்துக்கு வீணாக செல்கிறது.
வீணாக செல்லும் மழைநீரை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் மேலும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் மழைநீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் வகையில் பெரிய தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் ண்டநாட்களாக கோரிக்கைகளாக உள்ளது