ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பெண்

செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா. இவர் மீது ஓட்டேரி, பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெடுங்குன்றம் 9-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கடந்த 20-ந்தேதி விஜயலட்சுமி ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். அதன்பின்னர் அங்கு வந்த ஓட்டேரி காவல்துறை சூர்யாவின் மனைவி விஜயலட்சுமியை கஞ்சா வழக்கில் கைது செய்து செங்கல்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் விஜயலட்சுமி தனது வக்கீல் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தார். விஜயலட்சுமியை எதிர்த்து தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சி சார்பிலும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் ஆய்வு

வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக திருப்பூரில் நேற்று திடீரெனப் பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது. மேலும் சாலைகளில் உள்ள குழிகளில் தேங்கியும் நின்றது. இதனால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படி சென்றன. திருப்பூர் மத்திய மாவட்டம் வடக்கு மாநகரம் 31 வது வட்ட கழகத்தில் பெய்த மழையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்வில் மாநகர பொறுப்பாளர்கள் TKT நாகராசன், ந. தினேஷ்குமார், வட்ட செயலாளர் கோமகன் ,வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சூர்யா, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.