கொரோனா பெரும்தொற்று இன்று உலகெங்கும் பரவுவதை காட்டிலும் பல குடும்பங்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அதன்வரிசையில், கொரோனா பெருந்தொற்றால் தந்தையை இழந்து,தாயும் கவலைகிடமான நிலையில் தன் வாழ்வாதாரம் நொடிந்த நிலையிலிருந்த பெண் ஆசிரியையின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு, தி.மு.க கோயம்புத்தூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி அவர்களின் சார்பாக குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.ஏ. காதர் மற்றும் நூறாவது வட்ட பொறுப்பாளர் சுரேஷ்பாபு ரூ.50, 000 ரொக்கமாக இன்று வழங்கினர்.