கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 29 பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை குளோபல் டெக் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த பிரபு கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி வகுப்பு மாணவர்கள் முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை தாங்கள் செய்து வந்த அறிவியல் சார்ந்த படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியில் தமிழ் துறை சார்பில் இயற்கை பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும மாணவர்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் தீமைகள் குறித்த மாதிரி வடிவிலான பொம்மைகள் செய்யப்பட்ட மாணவர்கள் நன்மைகள் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் போர்வெல்லில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் செயற்கை கருவியை மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சிக்கு நெய்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்.