சீமான் வலியுறுத்தல்: இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்..!

“இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

அப்போது, “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக. இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும்” என சீமான் தெரிவித்தார்.

ICC T 20 World Cup : வங்காளதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி தலைவர் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்து வீசசை நிதானமாக விளையாடினர். லஹிரு குமாரா 5.5 ஓவரில் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார். சாமிக்க கருணாரத்னே 7.4 ஓவரில் ஷகிப் அல் ஹசன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹிம், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த முகமது நைம் 50 ரன்களை கடந்து விளையாடினர். பினுரா பெர்னாண்டோ 16.1 ஓவரில் முகமது நைம் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி தலைவர் மஹ்முதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா மற்றும் பதும் நிசாங்கா களமிறங்கினர். ஆனால் நசும் அகமது முதல் ஓவரின் நான்காவது பந்தில் குசல் பெரேரா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா மற்றும் பதும் நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்து விளையாட ஷகிப் அல் ஹசன் 8.1 ஓவரில் பதும் நிசாங்கா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ(0), வனிந்து ஹசரங்கா (6) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் பானுக ராஜபக்ச, சரித் அசலங்காவுடன் ஜோடி சேர்ந்து வங்காளதேச அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். கடைசியில் இலங்கை அணி 18.5 ஓவரில் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

ICC T 20 World Cup: இலங்கை அணி வெற்றி பெற172 ரன்கள் நிர்ணயித்தது வங்காளதேசம்

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி தலைவர் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்து வீசசை நிதானமாக விளையாடினர். லஹிரு குமாரா 5.5 ஓவரில் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார்.

சாமிக்க கருணாரத்னே 7.4 ஓவரில் ஷகிப் அல் ஹசன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹிம், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த முகமது நைம் 50 ரன்களை கடந்து விளையாடினர். பினுரா பெர்னாண்டோ 16.1 ஓவரில் முகமது நைம் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி தலைவர் மஹ்முதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி 171 ரன்கள் எடுத்தது.

T 20 உலகக்கோப்பை: சூப்பர்-12 சுற்றுக்கு இலங்கை மற்றும் நமிபியா தகுதி பெற்றது

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கியது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், கடந்த 17 -ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றது.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஸ்காட்லாந்து அணி ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்து சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-2-ல் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ஸ்காட்லாந்து இணைத்துக்கொண்டது. அதேபோல இரண்டாவது இடம் பிடித்த வங்காளதேசம் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி ஏற்கனவே குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுடன் வங்காளதேசம் தன்னை கொண்டது.

இந்நிலையில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஏற்கனவே அயர்லாந்து, நமிபியாவை 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், அயர்லாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்திய இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து இருந்த நிலையில் நெதர்லாந்து அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முதலிடம் பிடித்து ஏற்கனவே குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுடன் இலங்கை அணி தன்னை கொண்டது.

இரண்டாவது இடத்திற்காக அயர்லாந்து மற்றும் நமிபியா அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அயர்லாந்து மற்றும் நமிபியா அணிகள் வாழ்வா சாவா என்ற நிலையில் இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரிட்சையில் இறங்கியது. இன்று நடைபெற்ற போட்டியில் நமிபியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-2-ல் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளுடன் நமிபியா இணைத்துக்கொண்டது.