இனி மின்கட்டணம் கட்ட வேண்டாம்.. தமிழக மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு..!

தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதைப்பின்படி மேற்கூரை சூரியசக்தி மின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்க ஒப்புல் பெற வேண்டியது இல்லை. தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் இல்லாமல் இதற்கான பணிகளை செய்ய முடியும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறி உள்ளது.

மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், 1 கிவா ரூ.30,000/- 2 கிவா ரூ. 60,000/- 3 கிவா ரூ. 78,000/- வரை மானியம். வழங்கப்படும். 1. உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும். 2. பொதுவாக மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 2-3 லட்சம் வரை செலவு ஆகும். 3. மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை காலம், பனி காலத்தில் 1-2 மணி நேர மின்சார நிலையத்தின் மின்சார சப்ளை தேவை மட்டும் இருக்கும்.

4. நீங்கள் மேற்கூரையில் சோலார் வைத்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். 5. அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம்தான் இது. 6. பொதுவாக மேற்கூரையில் சோலார் இருந்தால். மாதம் உங்களுக்கு மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. இருந்தாலும் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும். 7. மேற்கூரையில் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரூ.15,000 முதல் ரூ. 18,000 ரூபாய் இலவச சோலார் மின்சாரத்தில் இருந்து ஆண்டுக்கு சேமிக்கலாம். உபரி மின்சாரத்தை மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்காக விநியோக நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். சோலார் பேனல்களை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் பல விற்பனையாளர்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சோலார் பேனல்களை நிறுவுதல், உற்பத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன் கொண்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு ஏற்ற கூரையுடன் தங்களுடைய சொந்த குடியிருப்பு இருக்க வேண்டும்/ விண்ணப்பதாரர்கள் சரியான மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சோலார் பேனல்களுக்கு வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.