உணவு பாதுகாப்பு துறை அதிரடி: தமிழகம் முழுவதும் குளிர்பான மாதிரிகள் சோதனை தீவிரம்..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ஜோதிலட்சுமி தம்பதியின் மகள் காவியா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமி அங்குள்ள பெட்டி கடையில், ரூ.10 மதிப்புள்ள குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமி குடித்த குளிர்பானத்தில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற விவரங்கள் அச்சிடப்படாததால், காலாவாதியான குளிர்பானத்தை குடித்ததால் தான் சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடந்து, பெரம்பூரில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.