அரவிந்த் கெஜ்ரிவாலை பதவிநீக்கம் செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 அபராதம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்கக்கோரி ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சந்தீப்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ இதற்கு முன்பு ஒரு முதலமைச்சரை பதவிநீக்கம் செய்துள்ளதா என டெல்லி உயர்நீதிமன்றம் கேளவி எழுப்பியுள்ளது. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சந்தீப் குமாருக்கு தலைமை நீதிபதி அமர்வு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது தீர்ப்பளித்தது.