அதிகாரிகளின் அலட்சியம்..! 16 ஆண்டுகள்… 130 குடும்பங்கள் தெருவில்…

2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதாவது 2005-ல் எடப்பாடி நகர அரசு மருத்துவமனை கட்டுமான பணி துவங்கிய போது, அந்த இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த சுமார் 18 குடும்பங்களை, அன்றைய அரசு நிர்வாகம் அப்புறப்படுத்தி அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக அரசு உறுதியளித்தது.

அதனைத்தொடர்ந்து விளிம்பு நிலையில் வாழும் அந்த மக்கள், கைத்தறி மற்றும் இதர பகுதிகளில் தினக்கூலி வேலை செய்து வருபவர்கள் என அடையாளம் கண்டு, அந்த 18 குடும்பங்கள் உட்பட சுமார் 130 பயனாளிகளுக்கு அன்று ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி  17.11.2006 அன்று, சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு பட்டாவையும், அதற்குறிய லேஅவுட்டும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

ஆனால் அரசு பட்டா கிடைத்தும் அங்கு குடியேற முடியாமலும், மாற்று இடம் கிடைக்காமலும், சுமார் 16 ஆண்டுகளாக, இன்று வரை தெருவோரமாகவே வாழ்ந்து வருகின்றனர். அதாவது பட்டா கிடைத்த 130 பயனாளிகளில் சுமார் 30 பயனாளிகள் தொடக்கத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, பட்டா நிலத்தில் வீடு கட்ட முயன்றனர். ஆனால் ஒரு நபர் முழு நிலத்திற்கும் உரிமை கோரியது மடடுமல்லாமல் அந்த நபர் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததாக தெரிகிறது.

இதனால், அரசிடம் இருந்து பட்டா கிடைத்தும் உரிய நிலம் கிடைக்காமல் 130 பயனாளிகளும் மீண்டும் நிலமற்றவர்களாக மாறினர். இதற்கிடையில், பயனாளிகளுக்கு மாற்று நிலம் ஏற்பாடு செய்து தருவதாக ஆட்சியர் மூலம் உறுதியளித்தனர். அதற்காக சேலம், ஆவணி பேரூர் கீழ்முகம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும், அருள்மிகு கோட்டை மாரியம்மன் & சின்ன மாரியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான 6.30 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, அந்த நிலத்திற்கு சந்தை மதிப்பைவிட சுமார் 150% அதிகம் செலுத்த ஒப்புதல் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கடிதம் வழங்கினார் .

ஏறக்குறைய 9 ஆண்டுகள் கடந்தும், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால், எடப்பாடி தாலுகா மற்றும் ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு அதிகாரிகள் அலட்சிய போக்கை கடைபிடித்து வந்ததால் கடந்த 16 ஆண்டுகளாக அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீண்ட கால பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணுமாறும், 130 பயனாளிகளுக்கும் மேற்கண்ட இடத்திலோ அல்லது அருகிலுள்ள வேறு இடத்திலோ உடனடியாக பட்டா மற்றும் உரிய நிலம் வழங்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்ட 130 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அறப்போர் இயக்கத்தினருடன் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

ஆகவே “தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகும்” என்பதை உணர்ந்து ஆட்சியர்கள் உடனடியாக பாதிக்க பட்ட மக்களுக்கு அதிகாரிகள் அவர்களின் தவறுகளை உணர்ந்து மாற்று இடம் வழங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு சமூக ஆர்வலர்களின் ஆசை.

சேலம் ஆத்தூரில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்கு கருத்தரங்கம்

சேலம் மாவட்ட ஆத்தூர் A.T அங்கம்மாள் நினைவரங்கத்தில் மணிக்கூண்டு அருகில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்கு கருத்தரங்கம் கற்போம் பெரியாரியம் ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுகம் விழா நடைபெற்றது.

திராவிட தலைவர் வீரமணி புத்தகம் வெளியிட்டு விழா மற்றும் சிறப்புரை ஆற்றினார்.இந்த விழாவில் ஆத்தூர் திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் செழியன், மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் வார்டுகள் ஆய்வு

ஆத்தூர் நகராட்சி நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் இன்று 17 வது வார்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன்யடியாக  குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

அதேசமயம் அந்த பகுதியில் உள்ள சாக்கடைகள் கழிவறைகள் அனைத்தும் உடன்யடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று துப்புரவு பணியாளருக்கு உத்தரவு அளித்தார். அருகில் 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் தாவுத் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் அன்னதானம் வழங்கல்

ஆத்தூர் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உழவர் சந்தை முன்பு உள்ள கலைஞர் திடலில் அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் வார்டு செயலாளர் துரை, சில்லி முருகன் , அஸ்கர் அலி, பாஸ்கர், சம்பத்,பாபு, குமார்பிரபா ,மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கெங்கவல்லி பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நகர் புற அமைச்சர் நேருவிடம் மனு அளித்துள்ளனர். இதனை அடுத்து பஸ் நிலையம் அமைக்கும் இடத்தில் சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதாரம் நிலையம் பழுதடைந்து உள்ளது எந்த ஒரு பயன்பாடும் இல்லாத நிலையில் நேற்று சுகாதார நிலையம் அமைந்துள்ள இடத்தை பாழடைந்த கட்டிடத்தையும் துணை இயக்குனர் நெடுமாறன் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராணி ,பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் மருதாம்பாள் , வார்டு உறுப்பினர்கள் 4-வது வார்டு தங்கபாண்டியன் ஆறாவது வார்டு ஹம்சவர்த்தினி, 7-வது வார்டு சையது 3-ஆவது வார்டு லதா 13-வது வார்டு சத்யா 14-வது வார்டு முருகேசன் 15-வது வார்டு அருண் குமார் ,பேருராட்சி அதிகாரிகள் செல்லமுத்து, செல்வராஜ் கலந்து கொண்டனர்.

நகர மன்ற தலைவர் தலைமையில் அதிகாரிகள் உடன் ஆய்வுக்கூட்டம்

ஆத்தூர் நகராட்சியின் நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது .இந்த கூட்டத்தில் நகரமன்ற தலைவர்  பேசியது.

அதிகாரிகளும் நகராட்சி ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் பொதுமக்கள் எந்த ஒரு குறைகள் சொன்னாலும் உடன்யடியாக அவர்களுக்கு பணிவுடன் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே ஆத்தூர் நகராட்சி நிர்வாகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்தில்  நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சேகோ பேக்டரியில் பார்மிக் ஆசிட், அசிட்டிக் ஆசிட் உள்ளிட்ட 1,500 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சேகோ பேக்டரியில் ஆலையில் ரசாயனம் கலந்து ஜவ்வரிசி தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேகோ பேக்ட்ரியை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்த ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 9 ஆயிரம் கிலோ கிழங்குமாவு, 14 ஆயிரம் கிலோ கலப்பட ஜவ்வரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி ரசாயன பொருட்களான பாஸ்போரிக் ஆசிட் 210 கிலோ, ஹைட்ரஜன் பெராக்சைடு 300 கிலோ, அசிட்டிக் ஆசிட் 35 கிலோ, பார்மிக் ஆசிட் 105 கிலோ, பிளிச்சிங் பவுடர் 400 கிலோ உள்பட மொத்தம் 1,500 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மிரட்டி பணம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள திருச்சுழியூர் கிராமத்தை சேர்ந்த விஜயபிரபாகரன் என்ற இளைஞர் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். விஜயபிரபாகரன் சேலத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு ஆந்திரா செல்ல பர்மிட் வாங்கினார்.

பர்மிட் உடன் ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா ரூ.500 என சோதனைச் சாவடி ஊழியர் ரூ.2500 லஞ்சமாக கேட்டார். அந்த பணத்தை ஊழியரிடம் கொடுக்கும்போது வீடியோவை எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தமிழக எல்லையான கிறிஸ்டியான்பேட்டை செல்லும்போது காட்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் இவர்களை மடக்கி பணம் கேட்டு, நெல் அறுவடை எந்திர தொழிலாளர்களிடம் இடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோதனை சாவடியில் ஒரு வாகனத்துக்கு ரூ.500 கொடுக்கிறீர்கள். எனக்கு கொடுக்க கசக்கிறதா என கேட்கிறார். பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்குப் பதிவு செய்வேன் என மிரட்டுகிறார். இதனால் அவர்கள் பணத்தை கொடுக்கின்றனர். பணம் கொடுப்பதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் ஆந்திராவிற்கு சென்று விட்டனர்.

இந்த இரண்டு வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வீடியோ வைரலானது. இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு

சென்னை உச்ச மன்றத்தில் நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக மரவள்ளிக்கிழங்கு நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஆனால் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் பல சேகோ பேக்டரிகள், ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் பலவற்றைக் கலந்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. கடைகளில் விற்பனை செய்யப்படும் 3 வகையான ஜவ்வரிசியை நீதிபதி வாங்கி வந்திருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜவ்வரிசி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று கூறினார். அதையடுத்து, தான் வாங்கி வந்த ஜவ்வரிசி பாக்கெட்டுகளை அரசு வக்கீல் மூலம், மன்றத்தில் ஆஜராகியிருந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் நீதிபதி வழங்கினார்.

பால்வளத்துறை அமைச்சர் நாசர்: தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது

சேலம் ஆவின் பால் நிலையங்களில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டன.

அதற்கு ஒரு தொகையும் இதுவரை வரவில்லை. ஆதாரத்துடன் எங்களிடம் உள்ளது. அதன்மேல் நடவடிக்கை எடுப்போம், விடமாட்டோம்.இங்கிருந்து போனதற்கு அனைத்து ரசீதுகளும் உள்ளன. பணம் எதுவும் வரவில்லை.

வெளியே போனதற்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடான பணி நியமனம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் இந்த ஆட்சியில் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.