இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது என்று அதன் தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், இந்தியா இதுவரை 97 ராக்கெட்களை ஏவி யுள்ளது. மேலும் 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அதன் சுற்றுப்பாதைகளில் சுற்றி வரச் செய்துள்ளது. இஸ்ரோவுக்காக மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும், அதைவிட 2.54 மடங்கு கூடுதல் முதலீடாக நமக்குத் திரும்பக் கிடைத்து வருகிறது. இதன்மூலம் இஸ்ரோவுக்காக செலவு செய்யும் தொகை அனைத்தும் நமது நாட்டின் விண்வெளி துறை மேம்பாட்டுக்காக பயன்படுகிறது.
ஏழை அல்லது பணக்காரர் என்ற வித்தியாசமின்றி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் இஸ்ரோ தொட்டுள்ளது. இஸ்ரோவுக்காக செலவழிக்கும் தொகையானது, சமூகத்துக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் உடனடியாக உதவுகிறது என சோம்நாத் தெரிவித்தார்.