தொடர் வழிப்பறி ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு சொத்துகள் முடக்க நடவடிக்கை..!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சக காவல்துறையினருடன் இணைந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு சொத்துகளை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் தனது நண்பர் மூலம் தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் இயந்திரம் வாங்கி ரூ.20 லட்சம் பணத்துடன் சென்றார்.

அப்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், முகமது கவுஸை வழிமறித்து இது ஹவாலா பணமா என கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களின்படி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, இந்த மோசடிக்கு பின்னணியில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சன்னி லாய்டு செயல்பட்டது தெரியவந்தது. உடனே காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, தலைமறைவாகியிட்டார். இதையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு தனது நண்பர்கள் உதவியுடன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் டேராடூன் சென்று கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, சன்னி லாய்டு பூக்கடை மற்றும் திருவல்லிக்கேணி, ஜாம் பஜார் காவல் நிலையங்களில் பணியாற்றிய போது, ஹவாலா மோசடி நபர்களை குறிவைத்து சக நண்பரான சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறி மற்றும் தங்கம் பறிப்பு செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுபோன்ற வழிப்பறியில் சம்பாதித்த பணத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு ஜாம்பஜாரில் குளிரூட்டப்பட்ட அதி நவீன உடற்பயிற்சி மையம், கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி மதிப்புள்ள ரிசார்ட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல கோடிக்கு சொத்துகள் வாங்கி குவித்து இருந்தது தெரியவந்தது.

அதேநேரம் சன்னி லாய்டு பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சொத்துகளை முடக்க சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சன்னி லாய்டு வாங்கி குவித்து வைத்துள்ள சொத்து விவரங்களை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். சன்னி லாய்டு கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரால் பாதிக்கப்பட்டும், பணத்தை இழந்த நபர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் தொடர் புகார்கள் அளித்து வருகின்றனர். இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவல்லிக்கேணி காவல்துறை முடிவு செய்துள்ளனர்.

டேய் மாப்பிள எங்க காணோம் .. நான் செத்துட்ட மாப்பிள…. அப்பிடிய.. அவன் எங்க இருக்கானு பாரு

உலகெங்கும் நவீன தொழில் புரட்சியின் விளைவாக புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதீத வளர்ச்சியை எவ்வளவு சந்தித்திது இருக்கிறதோ அதே அளவிற்கு சமூதாய சீர்கேடுகளையும் மக்கள் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். சினிமாவை பார்த்துதான் மக்களின் மனநிலை சிதைக்கப்பட்டது என ஒரு சிலரின் கருத்துக்களாக இருந்து வரும் நிலைமாறி தொலைக்காட்சி சீரியல்களை பார்த்து மனிதாபிமானதை தொலைப்பது மட்டுமின்றி இன்று பலர் மனோதத்துவ மருத்துவர்களாகவே மாறிவிட்டனர்.

கொடிது கொடிது …அதனினும் கொடிது என்ற ஔவையார் வார்த்தையை சொல்லளவில் தான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகளை செயலளவில் பார்த்ததில்லை. நாம் இளைய தலைமுறையினர் அதை அனுபவித்து சீர்கெட்டு கொண்டு இருக்கின்றனர். மேலும் அதை சீர் செய்ய வேண்டிய நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி பழைய சித்தாந்தங்களை பேசிக் கொண்டிருக்கின்றோம்.

சினிமா, சீரியல் இதைவிட மிக அதிகமாக ஊடுருவியுள்ள சமூக வலைத்தளங்களில் நம்மை சீரழித்து கொண்டிருந்தாலும், இளைய தலைமுறையினர் அந்த சமூக வலைத்தளங்களில் சிக்கி ஒருபடி மேலேபோய் டேய் மாப்பிள எங்க காணோம் .. நான் செத்துட்ட மாப்பிள அப்பிடிய.. அவன் எங்க இருக்கானு பாரு நான் அவனை சுட்டுடுரேன் அத பாரு மேல மறைஞ்சிக்கிட்டு இருக்கிறான்… என்ன ஆச்சி மாப்பிள … என்னையும் சேர்த்து போட்டுடன் மாப்பிள…. என பித்து பிடித்தவர்களாக 5 வயதுலேயே உளறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நாம் கடந்த காலங்களில் உறவுகளை சம்பாதிக்கவும், வெறுப்பை அறுவடை செய்யவும் நம் முன்னோர்கள் புறாவை தூது அனுப்பினர் அது பின்னாளில் உருமாறி மாட்டுவண்டியாக மாறியது. அதன்பின்னர் தபால்கள் மூலமாக உறவுகளை சம்பாதிக்க, தந்திகள் மூலம் துக்கத்தை பறிமாறினோம். ஆனால் எப்போது செல்போன் ஒவ்வொரு குடிமகன் கைகளில் வந்ததோ அப்போதே நாம் BP மாத்திரைகள் அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டோம்.

இந்த செல்போன் பயன்பாட்டால் முன்பின் தெரியாதவர்களின் மூலமாக நாம் BP ஏறி இன்று உயிரை மாய்த்து கொண்டுள்ளோம். செல்போன்களில் விழித்து செல்போனுடனே நாள் முழுவதும் சுற்றித்திரிந்து, உறங்கும் போதும் செல்போனுடனே உறங்குகின்ற கலாசாரம் நம்மில் பரவிக் கிடப்பது மிகுந்த வேதனை தருகிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு உலகம் பரந்து விரிந்து இருக்கிறது.

மேலும் இன்று உலகையே கொரோனா ஆட்டிப்படைக்கும் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் கைகளில் செல்போன்கள் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டுள்ளது. இதன் விளைவாக நமது சமுதாயம் சீர்கெட்டு போய் நாடெங்கும் திரும்பும் திசையெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் போன்ற கொடூர சம்பவங்கள் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும், கொலையானது கொசு அடிப்பதை போல, சாதாரண நிகழ்வாக மாறி போயிருக்கிறது.

சிறிது நாட்கள் வாழ்ந்தாலும், ராஜ வாழ்க்கை வாழ ஆசைப்படும் அவர்களின் மனதில் விஷ வித்தை உருவாக பல இடங்களில் பல விதமாக ஏமாற்றி கடன் வாங்கி கோடிக்கணக்கில் ஏமாற்றும் கும்பல், எந்த தொழிலையும் செய்யாமல், தங்களை தொழிலதிபர்களாக காட்டிக் கொள்ளும் கும்பல், மக்களுக்கு சேவை செய்வதாக கூறி உலகை ஏய்க்கும் மற்றொரு கும்பல் என திரும்பும் திசையெல்லாம் பல விதமான முகமூடிகளை அணிந்து கூட்டம் துாவி விட்டதன் விளைவுகளை சமுதாயம் இன்று அறுவடை செய்துக் கொண்டுள்ளது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை சில தனி மனிதர்களின் இழிகுணங்களாக இருந்த நிலை மாறி அதுவே சமூகத்தின் மனோபாவமாக மாறி இன்று நாட்டையே செல்லரித்து கொண்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகளை பார்த்து கொண்டே வாழும் மக்கள் யார் ஆண்டாலும், நம் நிலை மாறாது என்று விரக்தி நிலையில் இன்று வாழ்கின்றான். நம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் தன்னை தானே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.