ரத்தன் டாடா முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வளர்ப்பு நாய்..!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் நேவல் டாடா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் மும்பையிலுள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் நேவல் டாடா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் காலமானார்.

இவரது மறைவைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ரத்தன் நேவல் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே அறிவித்தார்.

இந்நிலையில் ரத்தன் நேவல் டாடாவின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக தெற்கு மும்பையிலுள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து ரத்தன் நேவல் டாடாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவரது உடல் வொர்லி மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தின் போது ரத்தன் நேவல் டாடாவின் முகத்தை பார்த்த படியே பிரிய மனமில்லாமல் பக்கத்திலேயே உட்கார்ந்த வளர்ப்பு நாய் கோவா நின்றது. இந்த சம்பவம் அங்கு குடியிருந்தவர்களுக்கு மிகுந்த மனவருத்தம் கொடுத்தது.

டாடா ரத்தன் கடைசி வரை திருமணம் செய்யாததற்கு இந்திய-சீனப் போர் ஒரு காரணமா..!?

ரத்தன் நேவல் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார். இதற்கான காரணத்தை அவரே முன்பு ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருந்தார். அது குறித்து நாம் பார்க்கலாம். தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்த 86 வயதான ரத்தன் நேவல் டாடா உடல்நலக்குறைவால் மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தன் நேவல் டாடா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று அரசு மரியாதை வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ரத்தன் நேவல் டாடா மறைவு குறித்த செய்தி வெளியானதும். உலகெங்கும் உள்ள மக்கள் பலரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். ஆனால் 86 வயதாகி இருந்தாலும் ரத்தன் நேவல் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்குக் குழந்தைகளும் இல்லை. இதற்கான காரணத்தை அவரே கடந்த காலங்களில் விளக்கியுள்ளார்.

ரத்தன் நேவல் டாடா முதலில் அமெரிக்காவில் கல்லூரி படிப்பை முடித்து அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் இருப்பினும் அதைத் தொடர முடியாமல் போனதாக அவர் முன்பு ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகப் பழைய நேர்காணல் ஒன்றில் ரத்தன் நேவல் டாடா பேசுகையில், “அமெரிக்காவில் வேலை செய்த போது நன்றாக இருந்தது… அங்கு கிளைமேட் கூட அருமையாக இருக்கும்… எனக்குச் சொந்தமாக கார் இருந்தது, நான் என் வேலையை விரும்பினேன். அப்போது ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். கிட்டத்தட்ட திருமணம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டேன்.

இருப்பினும், அப்போது திடீரென எனது பாட்டியின் உடல்நிலை மோசமானது. இதனால் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது எனது காதலியை இந்தியாவுக்கு வந்துவிடுவார் என்றே நம்பினேன். ஆனால், அப்போது தான் 1962 இந்திய-சீனப் போர் வெடித்து இருந்தது. இதனால் காதலியின் பெற்றோர் இந்தியா அனுப்பச் சம்மதிக்கவில்லை. இதனால் அந்த உறவு அப்படியே முறிந்து போனது” என நேர்காணலில் மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பேட்டியில், “நான் நான்கு முறை திருமணத்திற்கு மிக அருகில் வந்தேன். இருப்பினும், ஒவ்வொரு முறையும் பயம் அல்லது வேறு எதாவது ஒரு காரணத்தினால் பின்வாங்கிவிட்டேன்” என டாடா ரத்தன் குறிப்பிட்டு இருந்தார். பிறகு தனிப்பட்ட காரணங்களால் அப்படியே சிங்கிளாக இருக்க முடிவு செய்து விட்டதாகவும் ரத்தன் நேவல் டாடா குறிப்பிட்டார்.

மேலும் ரத்தன் நேவல் டாடா கூறுகையில், “அதேநேரம் எனது இந்த முடிவால் சில நேரங்களில் மனைவி, குடும்பம் இல்லாததால் சில முறை நான் தனிமையாக உணர்ந்துள்ளேன். ஏக்கமாக இருக்கும். அதேநேரம் சில நேரங்களில் சுதந்திரமாக இருக்கும் உணர்வும் இருக்கும். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்க முடிவதாக சில நேரம் உணர்வேன்” என  ரத்தன் நேவல் டாடா கூறியிருந்தார்.