ஆட்சியர் அறிவுறுத்தல்: நிலுவைத் தொகைகளை செலுத்தி, ஒதுக்கீடு ரத்தாவதைத் தவிக்கவும்..!

வீட்டு வசதி வாரிய கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவைத் தொகைகளை செலுத்தி, ஒதுக்கீடு ரத்தாவதைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம், கே.கே.நகர். மதுரவாயல், அசோக் நகர், எம்டிபி திட்டம், ராஜா அண்ணாமலைபுரம்.

மேலும், விசாலாட்சி தோட்டம், மாந்தோப்பு காலனி, 144-ராமாபுரம், 16-வளசரவாக்கம், 428-புலியூர், பழைய ராமாபுரம், சிஐடி நகர் மேற்கு, நெசப்பாக்கம், 384-ராமாபுரம், 48-புலியூர், மரவேலைப் பிரிவு திட்டம் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களில் பலர் வாரிய விதிகளின்படி தொகை திருப்பிச் செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழக அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்ட காலமாக நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை.

ஆகையால், ஒதுக்கீடுதாரர்கள் இந்த அறிவிப்பைக் கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை, தொகை செலுத்திய ரசீது மற்றும் ஒதுக்கீடு தொடர்பான அசல் ஆவணங்களுடன் கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கை நேர் செய்து நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும். மேலும், வாரிய விதிமுறைகளின்படி கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையைத் தவிர்க்கலாம் என ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது..!

மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள அறிக்கையில், உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அந்த வகையில், சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் பிரிவில் 10 விருதுகளும், ஹெலன் கெல்லர் விருது பிரிவில் 2 விருதுகளும், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப்பணியாளர், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு விருதும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர், நடத்துநர், பொதுக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளில் தலா 2 விருதுகள் என மொத்தம் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுடன் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகர்களை வட சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க சென்னை மாவட்ட ஆசியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

ரஷ்மி சித்தார்த் ஜகடே: பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்க வேண்டும்..!

பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென் பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 ன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ஏற்படுத்தப்படவேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களை கொண்டு அமைக்க வேண்டும். அவற்றில் அதிகபட்சமாக 3 பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார்பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்கள் பெறப்பட்டவுடன் உள்ளக புகார்குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும். 10 க்கும் குறைவாக உள்ள பெண் பணியாளர்கள் அல்லது வீட்டு வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால் அந்நபர் தனது முதலாளிக்கு எதிராக நேரடியாக மாவட்டங்களில் செயல்படும் உள்ளூர் புகார் குழுவில் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.உள்ளூர் புகார் குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அறிக்கையாக ஒவ்வொரு நிறுவனமூம் வருடாந்திர அறிக்கையாக வழங்கப்பட வேண்டும்.

உள்ளக புகார்குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும்.இப்புகார்குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்களை www.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவு செய்யலாம். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார்குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,” என ரஷ்மி சித்தார்த் ஜகடே அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி: அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் நவம்பர் 15-க்குள் பதிவு செய்ய வேண்டும்..!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் http://tnswp.com இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம்.

இப்பதிவை மேற்கொள்ள அறக்கட்டளை பதிவுப் பத்திரம், FORM D- License சொந்த கட்டிடம், வாடகை ஒப்பந்தப் பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று, காவல் துறையின் சரிபார்ப்பு சான்று போன்றவை அவசியம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சத்துடன் விருது விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்..!

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட, 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாகப் பங்காற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது வழங்குவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைகள் திருமணத்தைத் தடுக்கவும், பெண் கல்விக்கு பாடுபட்ட, வீர தீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ல் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனம் தகுதியுடைய 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைக் கண்டறிந்து, பரிந்துரை செய்து சென்னை ஆட்சியர் அலுவலகத்துக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்விருதுக்கு http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கையேடு தயாரிப்பு குறித்த விளக்கம் மற்றும் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அக்டோபர் 3-ஆம் தேதி 4மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கையில் தெரிவித்துள்ளார்.