வெறும் 8 மணி நேரத்தில் புரட்டி போட்ட மழை ..! நிலை குலைந்த ஸ்பெயின்..!

ஸ்பெயின் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் சவாலநிலை அங்கு நிலவுகிறது. அந்த நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 213 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. இதனால் கிழக்கு வலேன்சியா பகுதிகளில், வீதிகளில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. மேலும் திரும்பும் பக்கமெல்லாம் சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நின்ற கார்கள் என சேதம். இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து பாய்ந்த காரணத்தால் குடியிருப்பு பகுதிகள் அப்படியே நீரால் சூழ்ந்த பகுதி போல காட்சி அளிக்கின்றன. வீதிகள் மிதக்கும் கல்லறையாக மாறியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஸ்பெயின் ராணுவம் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாக சுமார் 70 பேரை மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், தரைவழியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை புதன்கிழமை அன்று அணுக முடியாத சூழலை ராணுவம் தற்போது அங்கு வீடு வீடாக மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த திடீர் மழை வெள்ளத்துக்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என அந்த நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 20 மாதங்களில் வலேன்சியாவின் ஷிவா நகரில் பதிவான மழையின் அளவை காட்டிலும் அங்கு வெறும் 8 மணி நேரத்தில் மழை அதிகம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் விளை நிலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு சுமார் 1.5 லட்சம் மக்கள் அங்கு மின்சார வசதி இல்லாமல் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

என்னடா இது காளானா..! இல்லை குடையா..! என கிராம மக்கள் வியப்பில் உறைந்தனர்..!

வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியில் காளான் பறிக்கசென்ற சிறுவனுக்கு இரண்டு கிலோ மெகா காளான் கிடைத்தது. இந்த காளானை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் கவின். வடமதுரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக வடமதுரை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் சிறுவர்கள் காலையில் எழுந்து காளான்கள் பறிக்கச்செல்வது வழக்கம்.

வழக்கமாக சிறு சிறு காளான்கள் கிடைக்கும் அவற்றை கொண்டுவந்து வீட்டில் சமைத்து சாப்பிடுவர். நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் சிறுவர்கள் சிலர் காளான்களை தேடிச்சென்றனர்.சிறுவன் கவின் புதர்கள் அடங்கிய பகுதியில் பார்த்தபோது பெரிய அளவிலான காளான் ஒன்று இருந்தது தெரிந்தது. இதை பறித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் காளானை சிறுவன் எடுத்துச்செல்வதை கிராமமக்கள் வியந்து பார்த்தனர். இந்த காளானை எடை பார்த்ததில் 2.25 கிலோ கிராம் இருந்தது. இயற்கையாகவே முளைத்த வெள்ளை காளான் உணவுக்கு உகந்தது என்பதால் சிறுவனின் குடும்பத்தினர் மெகா எடை கொண்ட காளானை சமைத்து சாப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பேய் மழை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. முதலில் மெதுவாக பெய்த மழை நேரம் போகப் போக பேய் வேகத்தில் 4 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கியது.

மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை, அதனுடன் இணைந்த சேர்வ லாறு அணை பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்தது. மழை காரணமாக மணிமுத்தாறு அருவி இருக்கும் பகுதி தெரியாத அளவுக்கு வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. இந்த நீர் ஆற்றங்கரை யோர கிராமப்பகுதிகளிலும் புகுந்துள்ளது. இதனால் ஆற்றின் அருகே யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 76 செ.மீட்டர், திருச்செந்தூரில் 63 செ.மீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 57 செ.மீ. கோவில் பட்டி 35 செ.மீட்டர் மழையும் தற்போது வரை மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.