தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி மரணம்

சென்னையை அடுத்து பொன்னேரி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ரேவதி மற்றும் குமார் தம்பதியினரின் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயதான லட்சிதா. கடந்த மாதம் 27-ந்தேதி லட்சிதா உடல் நலக்குறைவால் பொன்னேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஊசி போட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் லட்சிதாவின் கழுத்தில் கட்டி ஏற்பட்டு பெரிதாக மாறிய நிலையில் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்த உடன் மீண்டும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் பின்னர் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துவிட்டார்.

தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி இறந்ததாக கூறி பொன்னேரியில் உள்ள தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு அங்கு இருந்த நாற்காலிகளை தூக்கி வீசியும் விளம்பர பலகைகள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

எங்கே செல்கிறது தமிழகம்: பெற்ற மகளை தந்தையே சீரழித்ததால் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி..!

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறை விசாரணையில் அம்பலம் இதுகுறித்து அவர்கள் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணம் அவரது தந்தை என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. காவல்துறையினர் தந்தையை கைது செய்தனர்.