உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் சாட்டா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தலித் பெண் ஒருவருக்கும், காவல்துறை காவலர் ராகவேந்திர சிங் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் காதலர்களாக ஜாலியாக இருந்துள்ளனர். முன்னதாக நர்ஸிங் படிப்பு படிக்கும் போது ஒன்றாக இருவரும் படித்ததாகவும், பின்னர் ராகவேந்திர சிங் காவல்துறை காவலாகவும், அந்த தலித் பெண் குர்கானில் நர்ஸிங் தொழிலுக்கும் சென்றுவிட்ட, இருவரும் அவ்வப்போது தனிமையில சந்தித்துக் கொண்டு இருண்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ நாளில் வாடகை வீட்டில் இருந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு ராகவேந்திர சிங் சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை நெரித்துக் கொன்றுவீட்டு அங்கிருந்து ராகவேந்திர சிங் தப்பி சென்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியத்தில் அந்த தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், கழுத்தை நெரித்து கொன்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அந்த தலித் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராகவேந்திர சிங் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் அதனால் அவரை கொன்றதாக ராகவேந்திர சிங் கூறியுள்ளார்.