CMRL நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரம் கேரள முதலமைச்சர் மகளிடம் சென்னையில் விசாரணை..!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூருவில் எக்சாலாஜிக் என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த இரு வருடங்களுக்கு முன் எர்ணாகுளத்திலுள்ள CMRL தாது மணல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் CMRL நிறுவனம் வீணா விஜயனின் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.

இத்தனை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இந்த விசாரணையை கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடியை விசாரிக்கும் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் ஏற்றுக் கொண்டது. இந்த அமைப்பு CMRL நிறுவனத்திலும் மற்றும் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள கேரள அரசின் தொழில் அபிவிருத்திக் கழகத்திலும் விசாரணை நடத்தியது. ஆனால் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து 10 மாதங்கள் ஆகியும் வீணா விஜயனிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்நிலையில், வீணா விஜயனிடம் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் விசாரணை நடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வீணா விஜயனிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்றது. இதன்பின் வீணா விஜயனை அதிகாரிகள் விடுவித்தனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகளிடம் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன்மூலம், மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இதில் மக்களவை – சட்டசபைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

இத்தனை தொடர்ந்து, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கோவிட் மாற்றத்திற்குப் பிறகு கேரளாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய புதிய யோசனை

வெளிநாட்டு ஊழியர் மாநாட்டில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு உரையாற்றினார். கோவிட் மாற்றத்திற்குப் பிறகு உலகளாவிய சூழ்நிலையில், மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கேரளாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடிய புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளைத நோர்கா-ரூட்ஸ் துறை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார்.