அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கில் கலப்படம்! செய்தியாளர்கள் மிரட்டல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த சின்னபாபு ரெட்டி குடும்பத்தினர் ஆந்திராவில் இருந்து சென்னை வந்து விட்டு ஆந்திராவிற்கு கடந்த 17-ம் ( ஞாயிற்று கிழமை) திரும்பிச் செல்லும் போது  திருவள்ளூர் அருகே பாண்டூர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அதிமுக அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி-க்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் தங்கள் போக்ஸ்வேகன் போலோ காருக்கு டீசல் நிரப்பியுள்ளனர்.

சின்னபாபு ரெட்டி டீசல் நிரப்பிக்கொண்டு பங்கில் இருந்து கார் புறப்பட்ட 2-வது கிலோ மீட்டரிலேயே நடுரோட்டில் கார் நின்றிருக்கிறது. இதையடுத்துஅதிர்ச்சி அடைந்த  சின்னபாபு ரெட்டி குடும்பத்தினர் மெக்கானிக் உதவியுடன் காரில் ஏற்பட்ட கோளாறை ஆராயும் போது டீசல் தரமற்று கலப்படமாகியுள்ளதாக தகவல் தெரியவந்தது. ஆகையால்  சின்னபாபு ரெட்டி குடும்பத்தினர் மீண்டும் அந்த பங்கிற்கு சென்று காரின்  ஒரு பாட்டிலில் டீசலை வாங்கி பார்த்தபோது டீசலில் கலப்படம் கண்டு அதிர்ந்து போனவர்கள்  இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார்.

அப்போது ஊழியர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது நீங்கள் ஓனரை தான் கேட்கனும் என கூறியதோடு, இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளரான திருத்தணி கோ.அரி-க்கு தகவல் தெரிவித்தனர். இந்த செய்தி சுற்று வட்டார பகுதிகளில் காட்டு தீ போல பரவ உள்ளூர் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க பெட்ரோல் பங்க் விரைந்து சென்று பெட்ரோல் பங்கை கேமரா மற்றும் செல்போன் மூலம் படம் பிடித்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் திருத்தணி கோ.அரி அங்கிருந்த செய்தியாளர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களை ஒருமையில் பேசி படம் எடுக்க விடாமல் தடுத்தது அப்பகுதி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.