இம்ரான் கானின் மனைவி நீதிமன்றத்தில் கதறல்..! நீதிக்கு இடமில்லை..!

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை. நீதி கேட்டு, இனி நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி கண்ணீருடன் நீதிமன்றத்தில் கதறியழுத காட்சி அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் மாவட்ட மாஜஸ்திரேட் நீதிமன்றத்துக்கு புஷ்ரா பீபி நேற்று வந்திருந்தார். அப்போது, நீதிபதி முன் கண்ணீர் மல்க, புஷ்ரா பீபி பேசுகையில், ‘கடந்த 9 மாதங்களாக, நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு ஜாமீன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறேன். சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் கணவர் இம்ரான் கான், மனிதர் இல்லையா? இந்த அநீதியை எந்த நீதிபதியும் கண்டுகொள்வதில்லை.

இந்த நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை; இனி, நீதிகேட்டு நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என்றார். முன்னாள் பிரதமரின் மனைவி, நீதிமன்றத்தில் கதறியழுத காட்சியால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

Pakistan: தலையில் கேமரா…! மகள் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை..!

பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் வைரலாகி இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மலிந்து கொண்டேயிருக்கின்றன. பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருவதுடன், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன. சில கல்வி நிறுவனங்களிலேயே பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கம் பெற்றோர்களை சூழ்ந்து வருகிறது.

இதுஒருபுறமிருந்தாலும், பாகிஸ்தானில் ஒரு அப்பா, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை தந்து வருகிறது. தன்னுடைய செல்ல மகள், எங்கு சென்றாலும் அதை கண்காணிப்பதற்காகவே, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கிறாராம்.

இந்த கேமராவை எங்கிருந்து வேண்டுமானாலும் தன்னுடைய செல்போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இப்போதெல்லாம் அந்த பெண், பாகிஸ்தானின் தெருக்களில் எங்கு போனாலும், தலையில் கேமராவுடன்தான் நடமாடி வருகிறாராம். இதை அம்மக்களே ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இந்த விஷயம் மீடியா வரைக்கும் சென்று, செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்துள்ளர்.

இப்படி தலை மேலே, கேமராவை மாட்டியிருப்பது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா? என்ற செய்தியாளர் கேள்விக்கு, “இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டிலிருந்தபடியே,, நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை என் அப்பா கண்காணித்து வருகிறார். என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார். அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்தார்.

ICC T 20 World Cup: பாகிஸ்தான் அணி வெற்றி பெற 152 ரன்கள் நிர்ணயித்தது இந்திய அணி

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் வங்காளதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஆனால் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேற மீண்டும் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். ஆனால் ஹசன் அலியின் 5.4 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட், விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். ஷதாப் கானின் 12.2 ஓவரில் ரிஷப் பன்ட் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது.

ICC T 20 World Cup : இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பை திருவிழாவை வெற்றியுடன் தொடங்குமா…!?

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடும் நிலையில், உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.

உலகக்கோப்பை வரலாற்றில் ஒருநாள் போட்டி உட்பட இந்திய அணியை, பாகிஸ்தான் அணி இதுவரை வீழ்த்தியதே இல்லை. தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் போன்ற அதிரடி பேட்டிங் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி போன்ற தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

மகேந்திரசிங் தோனி ஆலோசனையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக ஐ.சி.சி. T 20 கோப்பையை வென்று எத்தனையோ சாதனைகளை படைத்த விராட் கோலியின் ஏக்கத்தை தணிக்கலாம்.

உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் உதை வாங்கி வரும் பாகிஸ்தான் இந்த முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. அணி தலைவர் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், பஹார் ஜமான் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் வரிசை உள்ளனர். மேலும் ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி இருவரும் பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.

இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி (தலைவர்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி.

பாகிஸ்தான் உத்தேச அணி: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர்), சோயிப் மாலிக், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், ஆசிப் அலி, ஹசன் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுப், ஷாகின் ஷா அப்ரிடி.

T20 world cup 2021: பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியத்துக்கு பணம் நிரப்பபடாத பிளாங் “செக்”

2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐசிசி T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற 6 முறை நடைபெற்றுள்ள தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் T 20 உலகக் கோப்பை போட்டி 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரைக் கைவிடுவதாக ஐசிசி அறிவித்ததால் 4 ஆண்டுகள் கழித்த பிறகு 2020-ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை போட்டி கொரோனா காரணமாக வரும் அக்டோபர் 17 தேதி கொரோனா அச்சம் காரணமாகப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது.

பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றால் கிரிக்கெட் ராசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் நிலையில் T 20 உலகக் கோப்பை போட்டி என்றால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் 12 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு இரு அணிகளும் மோதவுள்ளதால், T20 உலகக் கோப்பை மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய பா ரமீஸ் ராஜா, வரவிருக்கும் T20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியத்துக்கு பணம் நிரப்பபடாத பிளாங் “செக்” தருவதாக ஒரு வலுவான முதலீட்டாளர் என்னிடம் கூறி உள்ளார் என தெரிவித்துள்ளார்.