Tag: olympics 2021
டோக்யோ ஒலிம்பிக் பி.வி சிந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறியது
டோக்யோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ்–ஐ சிந்து எதிர்கொண்டார்.
இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டை கூட இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, அரையிறுதியில் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் 18-21, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார்.இந்நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ்–ஐ சிந்து 21- 13, 21 -15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பெற்று தந்தார். இதன்மூலம் ஒரு வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் பெற்று இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பவானிதேவிக்கு விளையாட்டு அலுவலர் பணி
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் 2021 வாள் வீச்சிற்கு தேர்வு செய்யப்படும் முதல் பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி அவர்களை ஊக்கப்படுத்திட அவர் தாயாரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணி வழங்கினார்.