OLA ஷோரூமிற்கு வெளியே மின்சார ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற அந்த நபர் மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் OLA நிறுவனத்தின் மீது அதிருப்தியிலிருந்த சாகர் சிங், தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக OLA ஷோரூம் வந்துள்ளார். ஷோரூமின் முன்னாள் நின்றுகொண்டு மைக்கில் சோகப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.
இதனால் அவரை சூழ்ந்து மக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சல்மான் கான் படத்தில் வரும் பிரபல சோகப் பாடலான Hum Dil De Chuke Sanam பாடலை சோகமான குரலில் OLA ஸ்கூட்டரை நோக்கி ‘ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், OLA என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது’ என்று பொருள்படும்படி அவர் அந்த பாடலை பாட யஅங்கிருந்தவர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மின்சார வானங்கள் பழுது பட்டும், திடீரென வெடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.