கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி செல்வராஜ் பலபாளையம் குருக்கபுரம் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
Tag: namakkal
மரத்தின் கிளைகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெரப்பஞ்சோலை மற்றும் பெரியகோம்பை ஊராட்சிகள் அமைந்துள்ளது. இங்கு செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர். தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க சீராக செல்போன் சிக்னல் கிடைக்கும் மரங்களில் ஏறியும், வீட்டு மொட்டை மாடிகள் மற்றும் மலை குன்றுகளுக்கு ஏறிச்சென்றும் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வருகின்றனர்.
பெண் ஆட்சியர் அதிரடி: அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி புதியதாக பொறுப்பேற்று ஆட்சியர் ஸ்ரேயா சிங் 3-வது பெண் ஆட்சியர் ஆவார். ஸ்ரேயா சிங் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்வரிசையில் நேற்று கொல்லிமலைக்கு ஆய்வு கொண்டு, அலுவலகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி நிறுத்தி சோதனை செய்தார். அப்போது உரிய அனுமதியின்றி மண் ஏற்றி வருவதை அறிந்த அவர் லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
ஜூனியர் ஃபிஸ்ட் பால் வீராங்கனைக்கு நிதியுதவி
நாமக்கல் குமாரபாளையம் தபஸ்வினி இந்திய ஃபிஸ்ட் பால் ஜூனியர் அணி வீராங்கனை ஆஸ்த்ரியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க நிதியுதவி செய்யுமாறு உதயநிதி ஸ்டாலின் கோயம்புத்தூர் பயணத்தின்போது சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். தபஸ்வினியின் கோரிக்கை ஏற்று நேற்று உதயநிதி ஸ்டாலின் ரூ.1.70 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
K.S. மூர்த்தி அவர்கள் தலைமையில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் விழா நாமக்கல் மேற்குமாவட்ட கழக செயலாளர் K.S.மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் ஒன்றிய,நகர செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு பயிர்கடன்களுக்கான காசோலை வழங்கல்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அம்பாயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர்கடன்களுக்கான காசோலையை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் மா . மதிவேந்தன் வழங்கினார், இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மற்றும் ஒன்றிய செயலாளர் பாலு கலந்து கொண்டனர்.