வடசென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட 70-வது வார்டு முத்துக்குமாரசாமி தெரு பகுதியில் சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த சாலையை சரி செய்ய அப்பகுதி மக்கள் பலமுறை சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிய வருகிறது.
இதனால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளன பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க வகையில் நேற்று சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் உயிரோடு உள்ள மீன்களை விட்டு அதை தூண்டில் மூலம் மீண்டும் பிடித்து தங்கள் எதிர்ப்பை சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு காண்பித்தனர். மேலும், தங்கள் பகுதியில் அமைந்துள்ள சாலை சீரமைத்து 6 ஆண்டுகள் கடந்து விட்டதால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கிறது.
அடுத்த நவம்பர் 1 தேதி பள்ளிகள் திறக்கபட உள்ளதால், பள்ளிகள் செல்லும் மாணவ, மாணவிகள் அதிகம் சிரமத்திற்கு உள்ளவர்கள். ஆகையால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் தெருவில் சாலைகளை செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள் இதன்மூலம் கோரிக்கை விடுத்தனர்.