இந்த வீடு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானத்தில் உள்ளது. சரியாக தவணை செலுத்தாத காரணத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று கொட்டை எழுத்தில் எழுதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாய சகோதரர்கள் பால கிருஷ்ணன், சக்திவேல் ஆகியோர் இதில் பால கிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக ஒரு நிதி நிறுவனத்தில் 19 மாதம் தவணையாக பணம் திருப்பி செலுத்தப்படும் என்ற அடிப்படையில் ரூ.10 லட்சம் கடன் வங்கியுள்ளார். பால கிருஷ்ணன் 15 மாத தவணை தொகை அவர் சரியாக செலுத்தி உள்ளார்.
ஆனால் கடந்து 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதே போல சக்திவேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவரும் சரியாக தவணை செலுத்தி வந்த நிலையில் அவரும் கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடன் தொகையை வசூலிக்க வந்த முத்தூட் மற்றும் JM இரண்டு நிதி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பாலகிருஷ்ணன், சக்தி வேலுக்கு சொந்தமான வீட்டில் பெரிய அளவில் இந்த வீடு அடமானத்தில் உள்ளது. 3 மாத நிலுவை ரூ.45,204 செலுத்தப்படவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளனர்.
முத்தூட் மற்றும் JM நிதி நிறுவன ஊழியர்களின் அடாவடியை சகிக்க முடியாத ஒரு சில சமூக ஆர்வலர்கள் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.