பெங்களூரில் இருந்து வி.கே. சசிகலா விடுதலையாகி வந்தபோது காரில் அதிமுக கொடி கட்டியிருந்ததை கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர் அதிமுக பிரமுகர் முகம்மது ஷெரீப்பின் இல்ல திருமண விழாவுக்கு வி.கே. சசிகலா வருகை தந்ததார். அப்போது வி.கே. சசிகலா வரவேற்று பேனர்கள், கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் அதிமுக கொடியை வி.கே. சசிகலாவை வரவேற்க பயன்படுத்தியதால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று சி.வி.சண்முகத்தின் கோட்டையிலேயே வி.கே. சசிகலாவுக்காக அதிமுக கொடி பறந்திருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் முகம்மது ஷெரீப் தற்போது சசிகலா ஆதரவாளராக மாறியிருக்கிறார். விழுப்புரம் மாவட்ட அதிமுகவை முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா டீமில் கூவத்தூரில் இருந்த சி.வி.சண்முகம், வி.கே. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முழு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறி வி.கே. சசிகலா, தினகரன் தரப்பை கடுமையாகச் சாடி வருவது நாடறிந்த விஷயமாகும்.
வி.கே. சசிகலா விடுதலையாகி பெங்களூர் சிறையில் இருந்து வரும்போது, அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்முதலில் சி.வி.சண்முகம் சொன்னது மட்டுமின்றி வி.கே. சசிகலா அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஆகையால் அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று டிஜிபியிடமும் புகார் அளித்ததும் சி.வி.சண்முகம் தான்.
இதற்கும் மேலாக,
கருவாடு கூட மீனாகிவிடலாம். வி.கே. சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது.
இந்த இயக்கத்தில் வி.கே. சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை.
ஜெயலலிதா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். அதனால் வி.கே. சசிகலா வேலை முடிந்தது சென்றுவிட்டார். அவ்வளவுதான்.
அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஓராயிரம் வி.கே. சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது
என்று கடுமையான வார்த்தைகளால் வி.கே. சசிகலாவை சி.வி.சண்முகம் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷெரீப் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தவர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முகம்மது ஷெரீப் கவுன்சிலர் சீட் கேட்ட நிலையில், அடுத்த முறை பார்க்கலாம் என சி.வி.சண்முகம் கூறி விரித்துள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த முகம்மது ஷெரீப், சி.வி.சண்முகத்திற்கு எதிரியாக கருதும் வி.கே. சசிகலா டீமில் கட்சி தாவினார்.
முகம்மது ஷெரீப், வி.கே. சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், முகம்மது ஷெரீப்பை அஸ்திரமாக பயன்படுத்தி வி.கே. சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகத்தை பழிவாங்க மெல்லமெல்ல காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
இந்நிலையில் முகம்மது ஷெரீப்பின் மகள் திருமணம் திண்டிவனத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு சசிகலா வருகை புரிவதால் வரவேற்பதற்கு முகம்மது ஷெரீப் தலைமையிலான வி.கே. சசிகலா ஆதரவாளர்கள் அதிமுக கொடிகளை திண்டிவனம் முழுவதும் நடும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக வி.கே. சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன் தலைமையில் அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகாரையும் மீறி முகம்மது ஷெரீப் ஆதரவாளர்கள் கொடிகளை நட்டதால் அதிமுகவினர் அவற்றை அகற்றினர். இதையடுத்து, மீண்டும் அதே இடத்தில் அதிமுக கொடிகளை நட முகம்மது ஷெரீப் ஆதரவாளர்கள் நட முயன்றதால் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் முகம்மது ஷெரீப் ஆதரவாளர்கள் அதிமுகவினரை கண்டித்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை சி.வி.சண்முகத்தின் தூண்டுதலால் அதிமுகவினர் ரகளை செய்வதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக கொடி சி.வி.சண்முகம் மட்டுமல்ல, யார் தடுத்தாலும் சரி கழகக்கொடி இன்னும் அதிகமாக பறக்கும் சின்னம்மா வருவது உறுதி. அதை தடுக்க எந்த முயற்சி வேண்டுமானாலும் அவர்கள் எடுக்கட்டும் என முகம்மது ஷெரீப் தெரிவித்தது பெரும் பரபரப்பை அப்பகுதில் ஏற்படுத்தியது.
பெங்களூர் சிறையில் இருந்து வி.கே. சசிகலா விடுதலையாகி தமிழகம் வந்தபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டியிருந்ததை கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகத்தின் கோட்டையிலேயே இன்று வி.கே. சசிகலாவுக்காக அதிமுக கொடி பறந்திருக்கிறது. அதாவது என்ன பேச்சு பேசுனா..? இதோ அதிமுக கொடியோட உன் கோட்டையில் வர்றேன்… உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ… என்ற பாணியில் சென்றது அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரமாக மாறி இருக்கிறது.