துணை – ஆய்வாளருடன் கட்டிப்புரண்ட வாலிபர்… வாணியம்பாடி பகுதியில் தொடரும் அவல நிலை..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செட்டியப்பனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துணை – ஆய்வாளர் குணா என்பவரை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நடுரோட்டில் தாக்கி கட்டி புரண்ட நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள காவலூரை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் பெங்களூருவிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

மணிகண்டன் நேற்று காலை காவலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கல்லரைபட்டி அருகே உள்ள பிருந்தாவன் பள்ளி பகுதியில், ஆலங்காயம் காவல் துணை – ஆய்வாளர் உமாபதி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துணை – ஆய்வாளர் உமாபதி மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டனை தடுத்து நிறுத்தினார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் துணை – ஆய்வாளர் கையிலிருந்த செல்போனை தட்டி விட்டு வேகமாக ஆலங்காயம் நோக்கி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துணை – ஆய்வாளர் மணிகண்டனை பின்தொடர்ந்து துரத்தி சென்று ஆலங்காயத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல துணை – ஆய்வாளர் உமாபதிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி நடு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான அவரைத் தொடர்ந்து தேடிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு காவல்துறையினர் சென்னை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அவரது வீடு மற்றும் விடுதியில் வைத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இன்று காலை அவரை காவல் வேனில் மதுரைக்கு அழைத்து வந்தனர். 7 மணிக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.