மம்தா பானர்ஜி: பாஜக அரசு தேர்தல் வரும்போதெல்லாம் விலையை குறைக்கிறார்கள்

மத்தியில் ஆளும் பாஜக அரசு சமீபத்தில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில், சில மாநிலங்கள் தங்களது ‘வாட்’ வரியை குறைக்கவில்லை. அந்த வரியை குறைக்குமாறு மேற்கு வங்காள அரசுக்கு பா.ஜனதா ஒரு வாரம் ‘கெடு’ விதித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் இதற்கு பதில் அளித்தார். “5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதை மனதில் வைத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் விலையை குறைக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்தி விடுகிறார்கள்.

‘வாட்’ வரியை குறைக்குமாறு எங்களுக்கு உபதேசம் செய்பவர்கள், மாநில அரசுகளுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று சொல்ல தயாரா? கடுமையான நிதி தட்டுப்பாட்டையும் மீறி, மாநில அரசு பல்வேறு மானியங்களை அளித்து வருகிறது.

சமீப காலத்தில், கலால் வரியை உயர்த்தி, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றதால், மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. ஆகவே, அந்த ரூ.4 லட்சம் கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமமாக பங்கிட்டு தர வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிந்தார்.

கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழிவாங்கும் அரசியல் செய்யாது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றும்

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் 3 நாள் பயணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவாவில் பழம்பெரும் நடிகை நபிஷா அலி மற்றும் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஷும் மம்தா பானர்ஜி முன்னிலையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்தனர்.

இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, நான் கோவாவுக்கு வருகிற வேளையில் எனது சுவரொட்டிகளை அவர்கள் சிதைக்கிறார்கள். நீங்கள் இந்தியாவில் இருந்து சிதைக்கப்படுவீர்கள். கருப்பு கொடி காட்டுகிறீர்கள். நிகழ்ச்சி நடத்த அனுமதி தர மறுக்கிறீர்கள். ஏனென்றால், திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் சமசரம் செய்து கொள்ளாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழிவாங்கும் அரசியல் செய்யாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றும். அதைச்செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் கோவாவின் முதலமைச்சர் ஆக மாட்டேன். ஆனால் அரசில் கொள்கை, செயல்படும்முறை இருப்பதோடு, ஊழல் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்.

திரிணாமுல் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. அது எங்கு வேண்டுமானாலும் போக முடியும். கோவாவுக்கு நாங்கள் வலுவான முறையில் பணியாற்றுவோம். நாங்கள் ஓட்டுகளை பிரிக்க விரும்பவில்லை. எல்லா கட்சிகளுக்கும் நீங்கள் ஆளுகிற வாய்ப்பை தந்திருக்கிறீர்கள். இப்போது எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். பா.ஜ.க. என்னை இந்து விரோதி என்று சொல்கிறது. ஆனால் எனக்கு நடத்தை சான்றிதழ் வழங்க அவர்கள் யாருமில்லை.

முதலில் அவர்கள் தங்கள் சொந்த நடத்தை சான்றிதழை தீர்மானிக்கட்டும். எங்கள் கட்சி பெயரான டி.எம்.சி.யில் டி- டெம்பிள், எம்- மாஸ்க், சி-சர்ச் ஆகும். இந்துக்களாக, முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக மக்கள் என்ன மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மதத்தின் அடிப்படையில் அவர்களை பிளவுபடுத்தாது. நாங்கள் மக்களை ஒன்றுபடுத்துகிறோம் என தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி: எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் இமாலய வெற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். ஆனால் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

அதனால், மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மம்தா பானர்ஜி போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே அனைத்து சுற்று வாக்குகள் எண்ணக்கையின் முன்னிலை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். இதன்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர். .இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

வெற்றி செய்தி அறிவிக்கப்பட்டவுடன் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிபூர் தொகுதியில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து, மத்திய அரசு எங்களை அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது. நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்பட்டது.

எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் மேலும் இடைத்தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி: இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும்//இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம்

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் இமாலய வெற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். ஆனால் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

அதனால், மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மம்தா பானர்ஜி இன்று பேரணியில் பங்கேற்றார்.

அந்த பேரணிக்கு பின்னர் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், மேற்குவங்காளத்தில் துர்கா பூஜை, லெட்சுமி பூஜைக்கு திரிணாமுல் அரசு அனுமதி அளிக்கமாட்டோம் என பாஜக பொய் கூறியுள்ளது. நரேந்திரமோடி, அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம். இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும். காந்தி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம புத்தர், ஜெயின்ஸ் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்தியாவை யாரேனும் பிளவுபடுத்த நாங்கள் விடமாட்டோம்’ என பேசினார்.