பபானிபூர் இடைத்தேர்தலில் நாளை மறுநாள் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் இமாலய வெற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். ஆனால் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.அதனால், மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில், பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பபானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்துள்ளார்.