மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கல்..!

தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6 பத்திரிகையாளர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் ரூ.10,01,206/- நிதியுதவி வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 14.1.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி புதிய திட்டமாக பத்திரிகையாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டது. அன்று அரசின் 1 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிட வழி செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 19.7.2022 அன்று பிறப்பித்த அரசாணையின்படி பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியாக ரூ 2 இலட்சத்து 50 ஆயிரம் வரையும் பத்திரிகையாளர் ஓய்யூதியம் பெறுபவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதித் தொகையிலிருந்து 50 சதவிகித தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் உடல் நலம் குன்றி மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 10 இலட்சத்து ஆயிரத்து 206 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

உடுமலை நாராயண கவியின் 112 -வது பிறந்தநாள் இன்று… செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் தம்பதியினருக்கு நாராயணசாமி மகனாகப் பிறந்தார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் நாராயணசாமியின் பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.

அதனை தொடர்ந்து 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்து நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார்.

தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82-வது வயதில் மறைந்தார். பின்னர் இவர் புகழை போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கொடுத்தது. மேலும் கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று அவரது பிறந்த நாள் விழாவில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னாள் MLA ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக அரசு சார்பில் நாராயணகவி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

75 -வது சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் மரம் நடும் விழா

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து கொண்டாடும் விதமாக..தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பாக (National Disaster Responce Force) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் செய்தி துறை அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டனர். உடன் வடக்கு மாநகர செயலாளர் அண்ணன் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டார்.