டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கல்வகுண்ட்ல கவிதாவை அமலாக்கத்துறை கடந்த மாதம் 15-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து கல்வகுண்ட்ல கவிதா நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், அவரை கைது செய்த சிபிஐ 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. காவல் முடிவடைந்த நிலையில் கே.கவிதா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் கல்வகுண்ட்ல கவிதா திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘இந்த விவகாரத்தில் பாஜக வெளியில் என்ன பேசுகிறதோ அதனை தான் சிபி.ஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதங்களாகவும் கேள்வியாகவும் முன்வைக்கப்படுகிறது. உன்மையை சொல்ல வேண்டுமென்றால் இது சிபிஐ கஸ்டடி கிடையாது. பாஜக கஸ்டடியாகும் ஆகும் என கல்வகுண்ட்ல கவிதா தெரிவித்தார்.