சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் ஜேப்பியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அங்குள்ள 91 ஏக்கர் மதிப்பு ரூ.2,000 கோடியிலான அரசு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரத்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
அதிமுகவை சேர்ந்த ஜே. பங்குராஜ் என்ற ஜேப்பியார் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கி கல்வி நிறுவனங்களில் கவனம் செலுத்த 1988ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவினார். அதன்பின்னர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றை தொடர்ச்சியாக உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் ஜேப்பியார். கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், ஜேப்பியார் மரணமடைந்தார்.
இந்நிலையில் ஜேப்பியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பில் இருந்த 91 ஏக்கர் மதிப்பு ரூ.2,000 கோடியிலான அரசு நிலம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதி மன்றம் நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த நிலம் நீதி மன்ற உத்தரவுப்படி அதிரடியாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.