மது போதையில் சைக்கிள் 3 ஆண்டுகள் சிறை..! செல்போன் பேசிக் கொண்டு சைக்கிள் ஓட்டினால் 6 மாதம் சிறை..!

மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2.75 லட்சம் அபராதம் மற்றும் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.

ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து அங்கு சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. அதேசமயம் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.

அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் பதிவாகி உள்ளன. இது நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும். இதனால் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. அப்போது சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதே விபத்துக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது. எனவே போக்குவரத்து விதிகளில் அங்கு புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் ஜப்பான் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது .

Daisuke Hori: 12 வருடமாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூக்கம்..!

மனிதன் சீரான மனநிலையைப் பேணுவதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதாவது 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் தூங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா..!? ஆம், தனது வாழ்நாளை இரட்டிப்பாக அனுபவிப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த 40 வயதாகும் Daisuke Hori கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்களே தூங்குகிறார்.

வடக்கு ஜப்பானில் உள்ள Hyogo மாகாணத்தைச் சேர்ந்த Daisuke Hori தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், அதன்மூலம் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். நீண்ட நேரத் தூக்கத்தை விட ஆழமான குட்டித் தூக்கம் உங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் உதவும், உதாரணமாக மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் குறைந்த நேரம் ஓய்வெடுத்தாலும் அதிக ஊக்கத்துடன் செயல்படுகிறனர் என்று Daisuke Hori தெரிவித்துள்ளார்.

யோமியூரி Yomiuri தொலைக்காட்சி ஹோரியின் அன்றாட செயல்பாடுகளை 3 நாட்களுக்குத் தொடர்ந்து Will You Go With Me? என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது. ஆச்சரியப்படும் வகையில் நாள் ஒன்றுக்கு 26 நிமிடமே தூங்கிய கோரி அதிக சுறுசுறுப்பாக தனது வேலைகளைச் செய்துள்ளார். உணவு உண்பதற்குப் பல மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதும், காப்பி குடிப்பதும் தூக்கக்கலகத்தை நீக்கும் என்று தெரிவிக்கிறார் ஹோரி. கடந்த 2016 முதல் குறைந்த தூக்கத்திற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார் ஹோரி. இதுவரை 2100 பேரை ultra-short sleepers ஆக ஹோரி தயார் படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாத்தா அஸ்தியை ஜப்பானின் இருந்து கொண்டு வாருங்கள்..!

அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியை நிறுவிய வரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனும் மேற்கு வங்க பாஜக துணைத் தலைவருமான சந்திர குமார் போஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆளுமை, புத்திசாலித்தனம், அசாதாரண தைரியம், தன்னலமற்ற தன்மை மற்றும் சுதந்திர போராட்டத்துக்கான அர்ப்பணிப்பு ஆகியசெயல்பாடுகளால் இந்தியர்களின் இதயங்களில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் இதயங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றென்றும் ஒரு ஹீரோவாக திகழ்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திர மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது. இதன்படி நேதாஜி 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் விமான விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 18-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த தருணத்தில், ஜப்பானின் ரென்கோஜியில் உள்ள அவருடைய அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடித்ததில் சந்திர குமார் போஸ் கூறியுள்ளார்.

7 பழங்களை பாதுகாக்ககும் 4 காவலர்கள் 6 நாய்கள்…!

ஜப்பானின் மியாசாகி மாம்பழம் மாணிக்கங்களைப் போல சிவப்பு நிறத்தில் பளபளக்கும்அவை உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தவை. சர்வதேச சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ .2.70 லட்சத்திற்கு விற்கப்படுகின்றன. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ற தம்பதியினர்.

சென்னையில் ஒரு ரெயிலில் ஒரு மனிதரை சந்தித்ததாகவும் அவர்களுக்கு அவர் அரிய ஜப்பானிய மா மரக்கன்றுகளை வழங்கினார். ராணி- சங்கல்ப் பரிஹார் என்ற தம்பதியினர் பழத்தோட்டத்தில் தெரியாமல் பயிரிட்ட மாம்பழ மரக்கன்றுகள் ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது என்பதை அறிந்ததும் ஆச்சரியம் அடைந்தனர்.

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும், தங்களது 7 மாம்பழங்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற இந்த தம்பதியினர் 4 பாது காவலர்களையும் 6 நாய்களையும் தங்கள் பழத்தோட்டத்தை 24 மணி நேரமும் பாதுகாக வைத்துள்ளனர்.