அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் கண்ணீர் விட்டு அழுத அயர்லாந்து காரர்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்தோணி கான் லான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மதுரை அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்க காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2-வது பரிசும், அதன் பிறகு அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசும் பெற்ற பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கிய முதலிடம் பிடித்தார்.

13 காளைகளை அடக்கிய பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை அடக்கிய மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை அடக்கிய ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான முதல் பரிசை சோலம் மோகனின் பாகுபலி பெற்றது. முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2-வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4-வது பரிசு லோடு பைக் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அயர்லாந்து நாட்டிலிருந்து அந்தோணி கான் லான் என்பவர் அடிக்கடி வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்த பின் மாடுபிடி வீரராக களமிறங்க முடிவு செய்தார். மாடு வீரராக களமிறங்க பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க ஆன்லைன் மூலம் தனது பெயரை பதிவு செய்து இருந்தார். இன்று ஜல்லிக்கட்டு திடலுக்கு வந்து உடல் தகுதி தேர்வில் பங்கேற்று அதில் தேர்வானார். மாடுபிடி வீரர்களுக்கு 40 வயது இருக்க வேண்டும். ஆனால், அந்தோணிக்கு 53 வயது என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 20 காளைகளை அடக்கி காரை தட்டி தூக்கிய அபிசித்தர்..!

மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அவருக்கு துணை முதலமைச்சர் முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மதுரை அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்க காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2-வது பரிசும், அதன் பிறகு அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசும் பெற்ற பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கிய முதலிடம் பிடித்தார்.

13 காளைகளை அடக்கிய பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை அடக்கிய மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை அடக்கிய ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான முதல் பரிசை சோலம் மோகனின் பாகுபலி பெற்றது. முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2-வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4-வது பரிசு லோடு பைக் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் இறுதிவரை கடும் போட்டிக்கு இடையே காரை தட்டி தூக்கிய பார்த்திபன்..!

மதுரை, பாலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த நூற்றுக்கணக்கான காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அதில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை பாலமேட்டில் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 7.35 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் கிராமக் கமிட்டி சார்பில் 6 கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டன. போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார்.

பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வீரர்கள் களமிறங்கினர். அதில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. அடுத்து 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் துளசிராம் 2-ஆம் இடம் பிடித்து பைக் பரிசு பெற்றார். பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்து எலக்ட்ரிக் பைக் பெற்றார்.

சிறந்த காளையாக முதல்பரிசு பெற்ற சத்திரப்பட்டி தீபக்குக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. சின்னப்பட்டி கார்த்திக் 2-வது இடம் பெற்றார். இவருக்கு அலங்கை பொன் குமார் சார்பில் நாட்டின பசுவும், கன்றும் வழங்கப்பட்டன. 3-வது இடம் பிடித்த குருவித்துறை பவித்ரனுக்கு விவசாய வேளாண் கருவி வழங்கப்பட்டது.

ஆனால் இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராமுக்கும் இடையே முதலிடத்திற்கான கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசி ஒரு சில சுற்றுகளில் பார்த்திபன் முதலிடம் பிடித்து காரை தட்டி தூக்கி சென்றார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு பதாகை..!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர்கள் பகுதியிலில் இந்தவர்கள் ‘அரிட்டாபட்டியை காப்போம்’ என்ற பதாகையுடன் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர் பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் டங்ஸ்டன் எடுப்பதற்கான குத்தகை ஏல உரிமையை இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கதுறை அமைச்சகம் கொடுத்தது. இந்த சுரங்க திட்டம் வந்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சமீபத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு விழா காலை 7.35 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிலர் ‘அரிட்டாபட்டியை பாதுகாப்போம்’ (SAVE ARITTAPATTI) என டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பதாகை வைத்திருந்தனர். அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பார்வையாளர்கள் வைத்திருந்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் உயிரிழப்பு..!

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் மாடுபிடி இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு தமிழர் திருநாளை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் நேற்று காலை 6.30 மணி அளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுக்க, வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதில் மாடுபிடி வீரர்கள் 31 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், 19 பார்வையாளர்கள் காவலர்கள் 4, ரிப்போர்ட்டர் ஒருவர் என ஆகமொத்தம் 65 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் கலந்து கொண்டார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கு நிகராக ஜல்லிக்கட்டில் தடம் பதிக்கும் பெண்கள்..!

வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிடும்போது, அந்தக் காளை அதுவரை பிடிபடாத காளையாக இருந்தால் அதன் பெருமைகளைச் சொல்வதுடன், உரிமையாளரின் பெயரையும் வர்ணனையாளர்கள் அறிவிப்பார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியென்பது ஆண்களால் ஆண்களுக்காகவே நடத்தப்படும் விளையாட்டு என்ற நிலை முன்பு. இதுவரை பெரும்பாலும் உரிமையாளரின் பெயர் ஆண்களாகத்தான் இருந்து வந்தது. அண்மைக்காலமாக காளைகளின் உரிமையாளர்களின் பெயரில் பெண்களும் இடம் பெறத் தொடங்கிவிட்டனர்.

தற்போது பெண்கள் பலரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தங்களின் பங்களிப்பை தரத் தொடங்கி விட்டனர். ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, பயிற்சி அளித்து வாடிவாசலில் களமிறக்குவதில் பெண்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் விரைவில் இடம்பெற உள்ளார் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா. இவர் வளர்க்கும் காளைக்கு ‘ராமு பையா’ என்று பெயர்.

இந்தக் காளையை கடந்த 10 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இக்காளையை களமிறக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இதுவரை யாரிடமும் பிடிபடாத எனது காளை வாஷிங் மெஷின், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பட்டுச் சேலைகள் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளது. இதுவரை எந்தவொரு போட்டியிலும் வீரர்களால் இந்தக் காளையை அடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.