காங்கிரஸ் கட்சியின் துணை கொறடா நியமனம்

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை கொறடாவாக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஹசன் மௌலானா அவர்கள் நியமனம் செய்தற்கு தங்கப்பாண்டியன், மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியை சேர்ந்தவர்களுடன் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ராகுல் காந்தியின் 51 பிறந்த நாளை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ராகுல் காந்தியின் 51 பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 151 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா வழங்கினர்.