கோவாவின் புதிய விடியலை காண நாங்கள் விரும்புகிறோம்

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, மம்தா பானர்ஜி தொண்டர்கள் முன்னிலையில் இன்று பேசும்போது, நான் உங்கள் சகோதரி போன்றவள், உங்கள் அதிகாரங்களை கைப்பற்ற நான் இங்கு வரவில்லை.

மக்கள் சங்கடங்களை சந்திக்கும்போது, அவர்களுக்கு நாம் உதவ முடியுமா? என்பது எனது நெஞ்சை தொட்டது. நீங்கள் உங்களுடைய பணியை செய்வீர்கள். அப்போது அந்த பணியில் உங்களுக்கு நாங்கள் உதவியாக இருப்போம். மேலும் மேற்கு வங்காளம் போன்று வருங்காலத்தில் கோவாவும் வலிமையாக மாற வேண்டும் என நாங்கள் விரும்புவது மடடுமின்றி கோவாவின் புதிய விடியலை காண நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கோவாவிலுள்ள ருத்ரேஷ்வர் தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கோவாவில் மிகவும் புனிதமான ருத்ரேஷ்வர் தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவா மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக ருத்ரேஷ்வர் தேவிடம் பிரார்த்திக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.