திருப்பூரில் “உலக வர்த்தகத்தில் இந்திய ஏற்றுமதி – கண்காட்சி மற்றும் கலந்துரையாடல்” நிகழ்ச்சி

மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன. உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையும்.

இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் அனைப்புதூர் IKF வளாகத்தில் நடைபெற்ற உலக வர்த்தகத்தில் இந்திய ஏற்றுமதி – கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் – மாண்புமிகு தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் கலந்துகொள்ள திருப்பூர் மத்திய தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ் MLA அவர்களின் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் S.வினித் IAS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்கு மாநகர திமுக சார்பாக TKT நாகராசன் அவர்கள், வடக்கு மாநகர பொறுப்பாளர் ந‌.தினேஷ்குமார் அவர்களும் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.