தாயின் வெறிச்செயல்.!: 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை

தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உட்பட மூவரை ஈரோடு சூரம்பட்டி காவல்துறை கைது செய்துள்ள நிலையில் மேலும் ஒருவரை ஈரோடு சூரம்பட்டி காவலர்கள் கைது செய்த நிகழ்ச்சி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை தாயின் இரண்டாவது கணவர் பாலியல் பலாத்காரம் செய்தமிழகத்தையே உலுக்கியுள்ளது.து மட்டுமின்றி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட காவல்துறைக்கு கடந்த மே புகார் சென்றது. இதுதொடர்பாக, ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளர் விஜயா தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாயின்  இரண்டாவது கணவன்  மற்றும் புரோக்கராக செயல்பட்ட ஒரு பெண் உள்பட மூவரை, போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், பல ஆண்டுகளாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கருமுட்டை கொடுத்து பணம் பெற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதாவது ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இந்திராணி தம்பதியினருக்கு ஒரே மகள், சிறுமிக்கு நான்கு வயது இருக்கும்போதே தந்தைசரவணன் திடீர் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஆகையால், சிறுமியின் தாய் இந்திராணி ஈரோட்டில் பெயிண்டராக பணியாற்றி வருபவரான சையத் அலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இந்திராணி மகள் 12 வயதில் பூப்படைந்து உள்ளார். சிறுமியை தாயின் இரண்டாவது கணவன் சையத் அலி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்திராணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்ததாகவும் ஒரு முறை கருமுட்டை வழங்கினால் 20 ஆயிரம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனது மகள் சிறுமி  என்றும் பாராமல் கருமுட்டை விற்பனை செய்வதற்கு இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவன்ர் சையத் அலி ஈடுபடுத்தி உள்ளனர். தொடர்ச்சியாக 8 முறை ஈரோட்டில் செயல்படும் பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 16 வயது சிறுமியை 22 வயது பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமான பெண்மணியாக சான்றுகள் அளித்து கருமுட்டைகளை விற்பனை செய்து வந்துள்ளனர் என தெரிய வருகிறது. இவர்களுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மே, 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, தன் சித்தி, சித்தப்பாவிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியதையடுத்து, காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து விசாரணை நடத்தி தாய், தாயின் இரண்டாவது கணவன் மற்றும் புரோக்கர் மாலதி என மூவர் மீதும், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்ததுள்ளனர். மேலும் விசாரணை நடத்திய நிலையில், சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் 25 வயதான ஜான் என்பவர் Big shot app மூலமாக சிறுமியின் வயதை 16-ல் இருந்து 22 ஆதார் கார்டில் மாற்றி கொடுத்துள்ளார் ஆகையால் சூரம்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தாளவாடியில் இருந்து கர்நாடகவிற்கு வீணாக செல்லும் தண்ணீர்; தாளவாடி மக்களை காப்பார்களா …? இல்லை மீண்டும்.. மீண்டும்… வேடிக்கை பார்ப்பார்களா…?

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகாவில் உள்ள மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,105 மீட்டர் உயரத்தில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைத்துள்ளது. அங்கு விவசாயம் முக்கிய தொழிலான மஞ்சள், மக்காச்சோளம், ராகி, முட்டைகோஸ், கரும்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதாவது விவசாயத்தை தவிர வேறு எந்த ஒரு தொழிலும் இல்லை.

இந்த பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் மழைநீரை மட்டும் நம்பி விவசாயம் நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆழ்குழாய் கிணறு மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். கோடை காலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காத நிலை தாளவாடி மலைக்கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லாததால் மலைக்கிராம மக்கள் வறட்சி காலத்தில் பெரும் துயரத்தை சந்திக்கின்றனர்.

ஆண்டுதோறும் தாளவாடியில் 600 மி.மீட்டர் முதல் 800 மி.மீட்டர் வரை மழை பொழிந்தும் தண்ணீர் சேமித்து வைக்க இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் மற்றும் ஆண்டு கொண்டு இருப்பவர்கள் எவ்வித முன்னேரிக்கை நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தண்ணீர் முழுவதும் ஓடையின் வழியாக வீணாக சென்று சுமார் 8 டி.எம்.சி. முதல் 12 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக மாநிலத்துக்கு வீணாக செல்கிறது.

வீணாக செல்லும் மழைநீரை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் மேலும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் மழைநீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் வகையில் பெரிய தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் ண்டநாட்களாக கோரிக்கைகளாக உள்ளது

பேராசை பெருநஷ்டம்.. புத்தி சொல்ல வேண்டிய ஆசிரியர் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார்

ஈரோடு பழையபாளையம் விநாயகர் கோவில் வீதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் குணசேகரன் என்பவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், என்னுடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்செய்தி வந்தது. அதில், ‘வீட்டிலிருந்தே வேலை செய்து தினமும் ரூ.2 ஆயிரம் சம்பாதிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து குணசேகரன் அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

அதற்கு அவர்கள் ஒரு இணையதள முகவரி கொடுத்து அதில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அதன்படி நானும் பதிவு செய்தேன். இதையடுத்து ரூ.200-க்கு ரீசார்ஜ் செய்து ரூ.100 சம்பாதித்து ரூ.300 திரும்ப பெறலாம். ரூ.500-க்கு ரீசார்ஜ் செய்து, ரூ.650 திரும்ப பெறலாம். இவ்வாறாக ரூ.50 ஆயிரம் வரை திட்டங்களை கூறினார்.

அதை நம்பிய குணசேகரன் முதல் நாளில் ரூ.100 கணக்கிலும், அடுத்து வந்த நாட்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் ரீசார்ஜ் செய்தும் பணம் பெற்றுள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதி ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து, ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பெற விண்ணப்பித்தேன். 72 மணி நேரத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றனர்.

அதன் பின்னர் கடந்த மாதம் 22-ந்தேதி ரூ.10 ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் செய்து ரூ.13 ஆயிரம் வரை திரும்ப பெற்றேன். 23-ந்தேதி ரூ.10 ஆயிரத்தில் தொடங்கி ரூ.3 லட்சம் வரை ரீசார்ஜ் செய்து முடித்து ரூ.4 லட்சத்து 57 ஆயிரம் பெற விண்ணப்பித்தேன். அப்போதும் தொகை அதிகமாக இருப்பதால் 72 மணி நேரத்துக்கு பின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் இதுவரை வரவில்லை.

பண பரிமாற்றம் முழுவதும் வங்கி கணக்கில் நடந்தது. எனவே நான் இழந்த ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குணசேகரன் தெரிவித்துள்ளார்..

கணவனை இழந்த இளம்பெண் இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரம் கேட்டு மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை நேற்று நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகிரி கருக்கம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி துளசிமணி தனது இரண்டு கைக்குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எனது கணவர் டிரைவர் வேலை செய்து வந்தார். எங்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நான் 7 மாத கர்ப்பமாக இருந்தபோது எனது கணவர் கொரோனா தொற்று பாதித்து இறந்துவிட்டார். எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவர் இறந்ததால், வாழ்வாதாரமின்றி 2 குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். எனக்கு நிவாரண நிதியும், குழந்தைகளை பராமரிக்க அரசு வேலையும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

நிதி நிறுவனத்தின் சார்பில் கடன் தருவதாக கூறி மோசடி: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் மனு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அண்ணா புதுகாலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆராயி. என்பவர் தனது மகனுடன் வந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர், தான் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.1 லட்சம் அனுப்புமாறும் கேட்டு கொண்டார். இதை உண்மை என்று நம்பி நான், எனது மகன் திருமலையின் கூகுள் பே செயலி மூலம், மர்மநபர் அளித்த செல்போன் எண்ணிற்கு அன்றைய தினமே அக்கம்பக்கம் கடன் வாங்கி ரூ.5 ஆயிரம் அனுப்பினேன்.

பின்னர் கடந்த 5-ந் தேதி அன்று ரூ.30 ஆயிரமும், 7-ந் தேதி அன்று ரூ.38 ஆயிரத்து 500-ம் என மொத்தம் ரூ.73 ஆயிரத்து 500 அனுப்பினேன். அதன்பின்னர் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு போதிய படிப்பறிவு இல்லாததால் ரூ.5 லட்சம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டனர். எனவே, என்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும் மனுவில் என தெரிவித்துள்ளார்.

சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணியின் முன்னாள் பொருளாளர் பாலகிருஷ்ணன் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக அவருக்கு ஆதரவு தெரிவித்து பாலகிருஷ்ணன் பெருந்துறை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.