நின்ற இராணுவ வீரரின் துடிப்புகளை 2 மணி நேரம் போராடி உயிர்ப்பித்த AIIMS மருத்துவர்கள்..!

இராணுவ வீரர் ஒருவர் மூச்சின்றி இருந்த நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீண்டும் உயிர்ப்பித்து AIIMS மருத்துவர்கள் சாதனைக்கு நாடெங்கும் குவியும் பாராட்டுக்கள். ஒடிசா மாநிலம் நாயகர் பகுதியில் அமைந்துள்ள ஒடபாலா என்ற கிராமத்தில் வசித்து வரும் இராணுவ வீரர் சுபகந்த் சாஹு. இவருக்கு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர் முதலில் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கைவிரித்தால் ஒடிசாவின், புவனேஸ்வர் AIIMS மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயத்துடிப்பு செயலிழந்ததை கண்டறிந்தனர். அப்போது மருத்துவர்கள் இராணுவ வீரர் இறந்துவிட்டார் என அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிப்பதற்கு முன்பு eCPR முறையில் முயற்சித்துப் பார்ப்போம் என்ற முயற்சியில் எக்ஸ்ட்ரா கார்போரல் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் எனப்படும் eCPR முறையில் சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

தொடர்ந்து 40 நிமிடம் அளித்த சிகிச்சையில் 2 மணி நேரம் துடிப்பே இல்லாமல் இருந்த அவரது இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. இதனையடுத்து சுபகந்த் சாஹு இதய துடிப்பு 96 மணி நேரத்தில், சீரானது. இது மருத்துவத்தில் ஒரு மைல்கல். அதாவது நோயாளியின் இதயம் துடிப்பு நின்று, 120 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது நாட்டில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆகையால், மூச்சின்றி இருந்த இராணுவ வீரரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீண்டும் உயிர்ப்பித்து சாதனை புரிந்துள்ள AIIMS மருத்துவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்த வண்ணமுள்ளது.

மதுபோதையில் அரசு மருத்துவமனையில் மயங்கி கிடந்த மருத்துவர்..!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த மருத்துவர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனை வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனை உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த மருத்துவர் மருத்துவமனைக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை மருத்துவரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த மருத்துவர் புறப்பட்டு சென்று உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.