தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை..! விடுதி கண்காணிப்பாளர் உட்பட இரண்டு பேர் கைது..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்பள்ளியின் விடுதி கண்காணிப்பாளர் சரண் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் பாலியல் தொல்லையை தாங்க முடியாத மாணவர் சம்பவம் பற்றி முதலில் பள்ளி தாளாளர் சுரேஷிடம் தெரிவித்துள்ளனர் அதனை பொருட்படுத்தாத பள்ளி தாளாளர் மாணவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து துணை காப்பாளர் ராம் பாபுவிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், அவரும் மாணவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தனது பெற்றோர்களிடம் கூறி கதறி மாணவர்கள் அழுதுள்ளனர். இதனை கேட்ட ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பள்ளியின் முன் திரண்டு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை கைது செய்து பள்ளியை மூடி சீல் வைக்க வேண்டும் என பிரச்சனை எழுப்பினர்.

சம்பவம் அறிந்த தாராபுரம் காவல்துறை சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியது.

மேலும், திருப்பூர் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட 17 மாணவர்கள் பள்ளி தாளாளர் சுரேஷ் மற்றும் காப்பாளர் சரண் உதவிக்காப்பாளர் ராம்பாபு மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுரேஷ், விடுதி காப்பாளர் சரண் மற்றும் உதவிக்காப்பாளர் ராம்பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..! நீதிபதி சி. எம். சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேரணியை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சி. எம். சரவணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டானா சென்று மீண்டும் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதைப் பொருட்களை தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு மாணவர்கள் சென்றனர்.

மேலும் இந்த பேரணியின் முடிவில் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழு, தலைவரும்மான சக்திவேல். மூத்த வழக்கறிஞர் கார்வேந்தன் ஆகியோர் மாணவர்களிடையே பேசுகையில், பீடி, சிகரெட், புகையிலை பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் உபயோகிப்பதால் உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பாடு என்ன தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதைப் பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பேரணியில், தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அமமுக’வின் 5-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் அமமுக கொடியேற்றம்

மறைந்த முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களில் (அதிமுக) விளைவாக அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்’ என்கிற முழக்கத்தோடு டி.டி.வி தினகரன் அவர்கள் 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்றோடு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அமமுக’வின் 5-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமமுக’வின் 5ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வாக திருப்பூர் புறநகர் மாவட்டம், தாராபுரம் நகரத்தில் கழக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை அவர்கள் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணை செயலாளர் தங்கநாயகி பெரியசாமி அவர்கள் முன்னிலை வகிக்க, வார்டு பொருப்பாளர் நாகராஜ் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.