ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .ஆத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக இந்த முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்தியவர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் நடத்தினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி BA,B.L அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியது மாணவர்கள் எந்த ஒரு தவறு செய்யாமல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் இப்பொழுது அதிகமாக பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் அதிகமாக கைது செய்யப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள் உஷாராக இருந்து பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்று கூறினார்.
பெண்களுக்கு 18 வயது முடிந்த பின்பும் ஆண்களுக்கு 21 வயது முடிந்த பின்பு மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வயது வரம்பு மீறி திருமணம் செய்தால் அதிகமாக மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் அதனால் மாணவர்கள் முக்கியமாக கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாமல் சட்டத்தை மீறி கொண்டு வாழ்க்கையை வீண்யடிக்க வேண்டாம் என்றும் கூறினார்
அதுமட்டுமில்லாமல் உங்களுக்காக நான் மாதம் மாதம் கூட உங்கள் பள்ளிக்கு வந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துகிறேன் என்று நீங்கள் நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று எடுத்துக் கூறினார் இந்த விழாவில் மூத்த வழக்கறிஞர் ராமதாஸ் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் பெரியசாமி சங்கத்தின் செயலாளர் வாசு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் உதயகுமார் அரசு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.