எச்சரிக்கை: அலுமினியம் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்..!

சமூக வலைதளங்களில் உணவகம் ஒன்றில் பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் வாங்கி வந்து அந்த உணவை திறந்து சாப்பிடும் போது அலுமினியம் கவரை வைத்து உணவு பொட்டலம் கட்டியதை பார்த்து அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த வீடியோ, உணவு பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது

ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்கினால் அந்த கடையின் உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிப்பது மட்டுமின்றி அவரது கடை உரிமைத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிரடி: தமிழகம் முழுவதும் குளிர்பான மாதிரிகள் சோதனை தீவிரம்..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ஜோதிலட்சுமி தம்பதியின் மகள் காவியா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமி அங்குள்ள பெட்டி கடையில், ரூ.10 மதிப்புள்ள குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமி குடித்த குளிர்பானத்தில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற விவரங்கள் அச்சிடப்படாததால், காலாவாதியான குளிர்பானத்தை குடித்ததால் தான் சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடந்து, பெரம்பூரில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.