அமெரிக்க தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் தன்னுடைய தந்தை என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், தேர்தல் வெற்றி எப்படி சாத்தியமானது? வெற்றிக்காக இவர் வகுத்த வியூகங்கள் என்ன? கமலா ஹாரிஸை தோற்கடிக்க எந்த மாதிரியான யுக்தியை கையில் எடுத்தார்? என்கிற கேள்விகளின் மீது விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆனால் இதையெல்லாம் மத்தியில் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண், தன்னை டொனால்ட் ட்ரம்பின் தனது தந்தைக்கு கூறியுள்ளார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இளம்பெண், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “எனது தந்தை ட்ரம்ப் மிகவும் கடினமானவர். என்னை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று, தாய் இவானாவை அவர் எப்போதும் கடிந்துக்கொண்டே இருப்பார். இவானா மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். என் மகளை உன்னால் கவனிக்க முடியாது என்றும் திட்டிக் கொண்டிருப்பார்.
வெளிநாட்டினர் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு போகிறார்கள். நான் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என ஆதங்கப்படுகிறார்கள். நான் எனது தந்தையை சந்திக்க அமெரிக்கா செல்ல இருக்கிறேன்” என தெரிவித்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.