கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஜெட் வட்டி என பல பெயர்களில் பல வடிவங்களில் வட்டி கொடுமை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் நலிவடைந்த கூலி தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை சாதகமாக்கிக் கந்து வட்டியை முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்கள் தமிழகத்தில் ஏராளம். கந்துவட்டி கொடுமையால் பொருள்கள் அபகரிக்கப் படுவதும், தற்கொலை செய்வதும், கடத்தப்படுவதும் சில நேரங்களில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறுதைக்கூட தமிழகத்தில் பார்த்திருக்கிறது. சில நேரங்களில் வட்டித் தொகை அதிகரித்து சம்பந்தப்பட்டவரின் சொத்துக்கள் பறிக்கப்படுவதும் நேர்வதுண்டு.
அதன்வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள ம. குன்னத்தூர் ஊராட்சி கூலி தொழிலாளி முருகன் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்திவரும் முருகன் என்பவரரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற மளிகை பொருட்கள் மற்றும் கொஞ்சம் பணம் வாங்கிய நிலையில் அது வட்டியும் முதலுமாக 20,000 ஆகிறதுள்ளது. அதை திரும்பி செலுத்தாத நிலையில் வீடு பேப்பரை வாங்கி கொண்டு மீண்டும் கொஞ்சம் பணம் கொடுத்துள்ளார்.
வட்டியும் முதலும் வராததால் கூலி தொழிலாளி முருகன் குடி போதையில் இருந்தபோது அவரின் குடும்பத்திற்கு தெரியாமல் மளிகை கடை நடத்திவரும் முருகன் 20 லட்சம் மதிப்புள்ள வீட்டை 2 லட்சத்து 25 ஆயிரம் பேசி 2 லட்சம் அட்வான்சு கொடுத்துள்ளதக்க 2018 செப்டம்பர் 27 ம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளளார். இந்நிலையில் முருகன் ஏதோ மளிகை கடை முருகனிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் அதனால் வீட்டை எழுதி வாங்கி விட்டதாகவும் ஊருல பேசிக்கிறாங்க அதை அறிந்து, பதறியடித்து ஓடி சென்று விசாரித்துள்ளார்.
அப்போது மளிகை கடை முருகன் என்னுடைய கொழுந்தன் முருகனுக்கு அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம் அதுக்கு வட்டி, இதுக்கு வட்டி என ஆகமொத்தம் 2 லட்சம் ஆகுது. பணம் வருவதாக தெரியவில்லை அதனால் ரிஜிஸ்டர் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் வாங்கி மூன்று வருடம் ஆக இன்னமும் 20 நாள் இருக்கு. இப்ப வட்டியும் முதலுமாக சேர்ந்தது 4 லட்சத்து 75 ஆயிரம் ஆகிறது இதை கொடுங்கள் நான் உங்களுக்கு இடத்தை மாற்றி எழுதி தருகிறேன். இல்லை என்றால் நான் கோர்ட்டுக்கு போய் இடத்தை என்னுடைய பெயருக்கு மாற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார் மளிகை கடை முருகன்.
கூலி தொழிலாளி முருகன் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தன வயதான தாய் மற்றும் கணவனை இழந்த அண்ணி குழந்தைகளின் எதிர்கால கேள்விக்குறியாகி விட்டதே குடி போதையில் நடந்த சம்பவத்தை எண்ணி வருத்தப்பட்டு கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று திடீர் மாரடைப்பால் கூலி தொழிலாளி முருகன் மரணம் அடைந்தார். எதையும் சமாளிக்க முடியும் என்கிற மனோபாவதில் மளிகை கடை முருகன் செய்த செயலில் இன்று ஒரு உயிர் பலியாகியுள்ளது.