நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மத்திய அரசு நிர்ணயித்து வந்த நிலையில், திடீரென எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்விளைவாக தற்போது, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் சட்டீஸ்கர், மகாராஷ்டிராவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மத்திய பிரதேசத்தின் எல்லைப் பகுதி மாவட்டமான பாலகாட்டிலுள்ள அனுப்பூரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நேற்று லிட்டருக்கு 36 காசுகள் விதமும், 37 காசுகள் விதமும் அதிகரித்து இதனைத்தொடர்ந்து பெட்ரோல் விலை ரூ.120.40 ஆகவும், டீசல் விலை ரூ.109.17 ஆகவும் விற்கப்பட்டது. இதனால் மத்தியப் பிரதேசமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.