பட்டப்பகலில் மாணவி கத்தியால் குத்தி கொலை… சென்னையில் மேலும் ஒரு கொடூரம்

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா, தாம்பரம் பகுதியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி முடிந்து தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஸ்வேதா வந்துகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக குத்தினார். மேலும் அந்த நபர் தனது கழுத்தில் குத்திக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல்துறை இருவரையும் உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியை கத்தியால் குத்திய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவியை கத்தியால் குத்திய நபர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் இவர், செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்த எஸ்.கவுஸ் பாஷா. காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்த இவர் கடந்த மே மாதம் 16-ந்தேதியன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழா சிங்கப்பெருமாள் கோவில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் அருகே நடந்தது.

இதில் கவுஸ் பாஷா மகன்களான டாக்டர்கள் சாதிக்பாஷா, ஷாக்திர் பாஷா தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, 15 தையல் இயந்திரங்கள், 300 பேருக்கு சேலை, 1000 பேருக்கு அன்னதானங்களை வழங்கினார்.