,
11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டை சேர்ந்த திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் C.N. அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மூலம் சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 16 மற்றும் 17-வது மக்களவையில் சிறப்பான பங்களிப்பு அளித்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின்தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு சன்சத் விருதுகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் C.N. அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர். வரும் ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15-ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.