பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்: கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி வேண்டும்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். தனியார் பள்ளிகளில், சம்பந்தம் இல்லாத அமைப்புகள் பயிற்சி அளிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகஅரசு அமைத்துள்ள சிறப்புக் குழு, தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 314 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். சட்டவிரோத குவாரிகளை மூடி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசியல் தொடர்பு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது. வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சுற்றியுள்ள 164 கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பு

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பு பணி நடந்தது.

தன்னார்வலர்கள் உதவியுடன் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரங்களிலும், திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய கோவில் பகுதிகளிலும் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 8 பேரும் சீர்காழியில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.

சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணியின் முன்னாள் பொருளாளர் பாலகிருஷ்ணன் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக அவருக்கு ஆதரவு தெரிவித்து பாலகிருஷ்ணன் பெருந்துறை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.