அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் ஒரு நாடகத்தை வி.கே.சசிகலா அரங்கேற்றி வருகிறார்

கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கோயம்புத்தூரில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக கொறடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சட்டப்பேரவை தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் மூலம் வி.கே.சசிகலா பகிரங்கமாக அறிவித்தார்.


ஆனால், அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன்பேசுவதாக வினோதமான ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றி வருகிறார்.சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இக்கூட்டம் அவருக்குகடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்து விடலாம் என வஞ்சக வலை விரிக்கின்றனர். அவர்களுக்கு அதிமுக ஒருபோதும் அடிபணியாது என்பதுஉள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், எம்எல்ஏக்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் கே.அர்ச்சுணன், அமுல் கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

வி.கே. சசிகலா: 4 வருஷத்துல நல்ல நிர்வாகத்தன்மை இல்லை…

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். அந்தவகையில் போடிநாயக்கனூரைச் சேர்ந்த நாகஜோதி விஜி என்ற பெண் தொண்டரிடம் பேசுகையில், இந்த 4 வருஷத்துல நல்ல நிர்வாகத்தன்மை இல்லை.

தொண்டர்களையும் பாக்கல. கட்சியையே சரியாக கவனிக்கல. இனி நான் பின்வாங்க மாட்டேன். நிச்சயம் வருவேன். இனி அரசியலை விட்டு ஒருபோதும் போகமாட்டேன் என சசிகலா தெரிவித்தார்.

அம்மாகூட நானும் சேர்ந்து வளர்த்த கட்சி இது… இது வீணாகி கூடாது…!

வி.கே. சசிகலா ராணிப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பேசுகையில், அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் ஒன்றாக இணைக்கிற முயற்சியில் நான் ஈடுபட்டேன். அதுக்கு அவங்க ஒத்துவராம, ஒத்துழைப்பு தராம இருந்தாங்க. நாங்க தனியா நின்னு 150 தொகுதி வரைக்கும் ஜெயிப்போம்னு சொன்னாங்க. சரினு நானும் பொறுமையா இருந்தேன். ஆனால் இப்போ என்னாச்சு? நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.

அம்மாகூட நானும் சேர்ந்து வளர்த்த கட்சி இது. இது வீணாகி கூடாது. இனி அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே என் வேலை. இனி ஒதுங்கி இருப்பேன், விலகி இருப்பேனு நிச்சயம் நான் சொல்லவே மாட்டேன். தொண்டர்களோட நம்பிக்கை வீண் போகாது. நான் நிச்சயம் வந்துருவேன் என சசிகலா தெரிவித்தார்.

தொண்டர்களோட எழுச்சிய பார்த்து பயந்து போயிருக்காங்கனு தெரியுது…!

ஜெயலலிதாவின் தோழி 38 ஆண்டுகால அதிமுகவின் ஆணிவேர் என புகழப்படும் சசிகலா தினமும் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்தவகையில் திருவாரூரை சேர்ந்த விஷ்வா கணேஷ் என்ற தொண்டரிடம் சசிகலா பேசினார்.

அப்போது, எல்லாம் பயத்துல ஏதேதோ பேசிகிட்டு இருக்காங்க… தலைவர் மறைவுக்கு பிறகு அம்மாவை இப்படித்தான் கட்டம் கட்டி பேசிக்கிட்டு இருந்தாங்க… ஆனால் கடைசியில என்ன ஆச்சு…. தொண்டர்கள் எல்லாரும் அம்மாகூட தான் நின்னாங்க… நினைச்சபடி அம்மா வந்தாங்க… அதனால பேசட்டும்… பேசட்டும்… இவங்க பேசுறதெல்லாம் பார்த்தா, தொண்டர்களோட எழுச்சிய பார்த்து பயந்து போயிருக்காங்கனு தான் எனக்கு தெரியுது. தொண்டர்கள் நம்ம பக்கம் தான் இருக்காங்க… பாத்துக்கலாம். ஊரடங்கு முடிஞ்சதும் நான் வந்துடுவேன் கவலையே படாதீங்க என தெரிவித்தார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயுமா?

மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற நாடோடிகள் படத்தின் நடிகை சென்னை பெசன்ட்நகரில் சாந்தினி வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.


அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை நேற்று வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த கட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.